உலகத்திலேயே ஆபத்தானவன் உன்னுடைய நண்பன் தான்: 'எனிமி' டீசர்
Send us your feedback to audioarticles@vaarta.com
விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்த ‘எனிமி’ என்ற திரைப்படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்கி முடித்து உள்ளார் என்பதும் இந்த படத்தின் டிரைலர் டீசர் இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சற்று முன் ‘எனிமி’ படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முழுக்க முழுக்க வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட அட்டகாசமான காட்சிகள் அமைந்துள்ள இந்த டீசரில் விஷால் மற்றும் ஆர்யாவின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் உள்ளன.
இந்த டீசர் முடிவடையும்போது உலகத்திலேயே மிகவும் ஆபத்தானவர் தெரியுமா? உன்னை பற்றி எல்லாவற்றையும் தெரிந்து இருக்கும் நண்பன் தான் என்ற வசனம் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
தமன் அதிரடி இசையில் ஆர்டி ராஜசேகரின் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இந்த படத்தை வினோத் குமார் என்பவர் தயாரித்துள்ளார். விஷால், ஆர்யா, தம்பி ராமையா, பிரகாஷ்ராஜ், கருணாகரன், மம்தா மோகன்தாஸ், மிருணாளினி ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Proudly Presenting The #EnemyTeaser
— Vishal (@VishalKOfficial) July 24, 2021
Hindi - https://t.co/KxO2WEHq1z
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com