விஷாலின் 'எனிமி' படம் குறித்த சூப்பர் அப்டேட் தந்த இயக்குனர் ஆனந்த் ஷங்கர்!

  • IndiaGlitz, [Monday,July 12 2021]

விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்திவரும் ‘எனிமி’ திரைப்படத்தை இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கி வருகிறார் என்பதும் கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘எனிமி’ படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்துள்ளது என அறிவித்துள்ளார். இதுகுறித்த ஒரு புகைப்படம் ஒன்றையும் அவர் பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘எனிமி’ படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் இந்த ஆண்டுக்குள் இந்த திரைப்படம் வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

விஷால் ஜோடியாக மிருணாளினி நடிக்கும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், மம்தா மோகன்தாஸ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தமன் இசையில், ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவில் உருவாகிவரும் இந்த படத்தை வினோத்குமார் என்பவர் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.