கலைப்புலி எஸ்.தாணுவுக்கு விஷால் கண்டனம் தெரிவித்தது ஏன்?
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், சரத்குமார் மற்றும் விஷால் அணியினர் விறுவிறுப்பாக தங்கள் அணிக்கு ஆதரவு தேடி வருகின்றனர். அரசியல் கட்சிகளின் தேர்தலை போல விறுவிறுப்பாக இருக்கும் இந்த தேர்தல், ஊடகங்களுக்கு பெருந்தீனி கொடுத்து வரும் நிலையில், சரத்குமார் அணிக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தாங்கள் இரு அணிகளுக்கும் இடையே சமாதான முயற்சி செய்ததை விஷால் அணியினர் ஏற்றுக்கொள்ளாதது தங்களுக்கு வருத்தத்தை தருவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழக முதலமைச்சர் தலையிட்டாலும் சமரசம் என்ற பேச்சுகே இடமில்லை என்று விஷால் கூறியதாக கலைப்புலி எஸ்.தாணு கூறியதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு விஷால் தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். தமிழக முதலமைச்சர் தலையிட்டாலும் சமரசம் என்ற பேச்சுகே இடமில்லை என்று தான் சொல்லாதை எஸ்.தாணு கூறியுள்ளது வன்மையாக கண்டிக்கதக்கது என்று விஷால் கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com