தேர்தலுக்கு பின் நடிகர்கள் ஒற்றுமையை நிரூபித்த விஷால்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர்கள் இரு பிரிவினர்களாக பிரிந்தாலும் தேர்தலுக்கு பின் மீண்டும் ஒரே அணியாக மாறிவிடும் என்றே சீனியர் நடிகர்கள் பலர் கருத்து தெரிவித்தனர். குறிப்பாக விஷால், நாசர் தரப்பினர் தாங்கள் யாரையும் தனிப்பட்ட முறையில் எதிர்க்கவில்லை என்றும் நடிகர் சங்க தேர்தலுக்குப் பின் அனைவரும் இணைந்து பணியாற்றுவதில் எந்தத் தடையும் இல்லை என்றும் கூறிவந்தனர்.
அண்மையில் இவர்கள் இப்படிச் சொல்வது வெறும் வார்த்தை அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு செயலைச் செய்திருக்கிறார். நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றிருக்கும் விஷால்.
சரத்குமார் அணிக்காக தீவிரமாக வேலைசெய்த நடிகர் பவண், தற்போது விஷாலை நாயகனாக வைத்து பாண்டிராஜ் இயக்கும் `கதகளி` படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை புதுப்பேட்டை பகுதியில் நடந்துவருகிறது.
இன்று நடைபெற்ற `கதகளி` படப்பிடிப்பில் விஷாலும் பவணும் இணைந்து நடிக்கும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இருவரும் எவ்வித மனக்கசப்பும் இன்றி படக்குழுவினர்களுக்கு ஒத்துழைத்ததாகவும் தளத்தில் நட்புடன் பழகியதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் பவண், பொல்லாதவன், திமிரு, குருவி, மாசிலாமணி, தகராறு உள்பட பல படங்களில் நடித்துள்ளார்
கதகளி` படத்தை விஷால் தன் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com