ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து குறித்து விஷால் கூறியது என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
நாளை மறுநாள் நடைபெறுவதாக இருந்த சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நேற்றிரவு தேர்தல் ஆணையம் அதிரடியாக ரத்து செய்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று நடந்த 'நெருப்புடா' படத்தின் இசை வெளியீட்டில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலிடம் ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த விஷால், 'ஆர்.கே நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஒரு வாக்காளராக பார்க்கும் போது தவறு என்றே தோன்றுகிறது. யாரோ இரண்டு பேர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த தேர்தலையும் ரத்து செய்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை' என்று கூறினார்.
மேலும் வெறும் போஸ்டரை மட்டும் வைத்துக் கொண்டு, படம் வெளியான முதல் நாளிலேயே பலர் சமூக வலைத்தளங்களில் தவறாக விமர்சனம் செய்வதாகவும் இதனால் அந்த படத்திற்கு மக்களிடம் கிடைக்க வேண்டிய வரவேற்பு பாதிக்கப்படுவதாகவும் கூறிய விஷால் கூடிய விரைவில் திரைப்படங்கள் குறித்த விமர்சனத்தை வரையறைப்படுத்த முயற்சி மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com