'கதகளி' 2ஆம் பாதியில் பாடல்களே இல்லை. விஷால்

  • IndiaGlitz, [Wednesday,December 30 2015]

கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'பசங்க -2' திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் பாண்டியராஜ் இயக்கிய அடுத்த படமான 'கதகளி' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தன்று பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது.


விஷால், காத்ரீன் தெரசா முதல் முறையாக ஜோடி சேரும் இந்த படத்தில் ரெஜினா, நாசர், கருணாஸ், சூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ள இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில் இந்த படம் குறித்து நாயகன் விஷால் பேட்டி ஒன்றில் கூறியதாவது: 'வம்சம்' படத்திற்கு பின்னர் பாண்டியராஜ் இயக்கும் அதிரடி ஆக்சன் படம்தான் 'கதகளி. இந்த படம் சென்னையில் இருந்து கடலூர் செல்லும் வழியில் நடைபெறும் சம்பவங்களின் கதை. இது ஒரு டிராவல் ஸ்டோரி. விறுவிறுப்பான திரைக்கதையுடன் அமைந்துள்ள இந்த படத்தில் இடைவேளைக்கு பின்னர் படத்தின் வேகம் கருதி பாடல்களே வைக்கப்படவில்லை. இந்த படத்திற்காக இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி நெதர்லாந்தில் ரிகார்டிங் செய்துள்ளார்' என விஷால் கூறியுள்ளார்.