இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விஷாலின் அடுத்த படம்: விரைவில் அப்டேட்டுக்கள்!

  • IndiaGlitz, [Saturday,October 09 2021]

விஷால் நடித்து வரும் 31வது திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து புரமோஷன் பணிகள் துவங்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஷால் நடிப்பில் உருவான ’எனிமி’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவரது அடுத்த படமான ‘துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விஷால் நடித்து வரும் 31ஆவது திரைப்படம் ’வீரமே வாகை சூடும்’ என்பதும் இந்த படத்தை து.பா சரவணன் என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

விஷால் ஜோடியாக டிம்பிள் ஹயாதி நடித்து வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று ஏற்கனவே விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்த நிலையில் இந்த படத்தின் டீஸர், சிங்கிள் பாடல், போன்ற புரமோஷன் பணிகள் இன்னும் ஓரிரு வாரத்தில் தொடங்கி விடும் என்று கூறப்படுகிறது.

விஷால் நடித்த ’எனிமி’, ‘துப்பறிவாளன் 2’, ‘வீரமே வாகை சூடும்’ என அடுத்தடுத்து அவரது படங்கள் வெளியாக இருப்பதை அடுத்து விஷால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.