விஷாலின் அடுத்த படம் குறித்த அதிரடி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Friday,April 02 2021]

நடிகர் விஷால் தற்போது ’துப்பறிவாளன் 2’ மற்றும் ’எனிமி’ ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்புகள் இறுதிகட்டத்தில் உள்ளன என்பதும் விரைவில் இந்த படங்கள் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஷால் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் சற்று முன் அந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. விஷால் நடிப்பில் து.பா.சரவணன் என்பவர் இயக்கத்தில், பாலசுப்பிரமணியன் ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில், மூர்த்தி கலை இயக்கத்தில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் இந்த படம் விஷாலின் 31 வது படம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

'Not a Comman man' என்ற கேப்ஷனுடன் உள்ள இந்த படத்தின் டைட்டில் விரைவில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை உள்பட மற்ற நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.