விஷாலின் 31வது படத்தின் அட்டகாசமான டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

  • IndiaGlitz, [Sunday,August 29 2021]

நடிகர் விஷால் நடித்து வரும் 31வது திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது என்பதும் இந்த படத்தை து.பா. சரவணன் என்பவர் இயக்கி வந்தார் என்பதும் தெரிந்ததே

அதிரடி ஆக்ஷன் படமான இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஷாலின் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்த நிலையில் சற்று முன்னர் விஷாலின் 31வது படத்திற்கு ’வீரமே வாகை சூடும்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு, ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

விஷால், டிம்பிள் ஹயாதி முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். கவின் ராஜ் ஒளிப்பதிவில், ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே விஷால் ’துப்பரிவாளன் 2’ மற்றும் ‘எனிமி’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

More News

பாரா ஒலிம்பிக்கில் முதல் பதக்கம்: வெள்ளி வென்றார் இந்திய வீராங்கனை

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த சில நாட்களாக பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் இதில் இந்திய வீரர்கள் வீராங்கனைகள் உள்பட உலகம் முழுவதும் இருந்து பல நாடுகளின்

பழித்தீர்த்துக் கொண்ட இங்… 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா தோல்வி!

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது.

சிறந்த கேப்டன்களில் முதலிடம் தோனிக்குத்தான்… புகழ்ந்து தள்ளும் மற்றொரு பிரபலம்!

தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர விளையாட்டு வீரர் டூ பிளசி. இவர் ஒருகாலத்தில் அந்த அணியின் மிகச்சிறந்த கேப்டன் என்றும் புகழப்பட்டவர்.

வெறிப்பிடித்த புஜாரா… 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நடக்கும் மாயாஜாலம்!

இந்தியக் கிரிக்கெட் வீரர் புஜாராவைப் பார்க்கும் சிலர், இவரை மாற்றிவிட்டு ஏதாவது நல்ல பிளேயரை போடுங்களேன்.

டுவிட்டரில் ட்ரெண்டாகும் ஷிவாங்கியின் மாஸ் லுக் புகைப்படம்....!

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஷிவாங்கி