close
Choose your channels

நடிகை விசாகா சிங்கிற்கு விரைவில் திருமணம்?

Wednesday, June 8, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'கண்ணா லட்டு தின்ன ஆசையா', வாலிப ராஜா' உள்பட பல படங்களில் நடித்த நடிகை விசாகா சிங் நடிகையாக மட்டுமின்றி தொழிலதிபராகவும் விளங்கி வருகிறார். தற்போது ரோம் நகரில் இருக்கும் விசாகா சிங்கிற்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
விசாகாசிங்கின் குடும்ப நண்பரும், அவரது சகோதரரின் நண்பருமான விக்ராந்த் ராவ் என்பவரை விசாகா சிங் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் விக்ராந்த் ராவ் பிறந்த நாளுக்கு தனது சமூக வலைத்தளத்தில் விசாகா சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரோம் நகரில் மார்க்கெட்டிங் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறாராம் விக்ராந்த் ராய். இதுகுறித்து விசாகாசிங் தரப்பில் விசாரித்தபோது அவருடைய திருமணம் இன்னும் சில வருடங்கள் கழித்தே நடைபெறும் என்றும் முறைப்படி மாப்பிள்ளை யார் என்பதை விசாகா சிங் அறிவிப்பார் என்றும் கூறப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment