நடிகை விசாகா சிங்கிற்கு விரைவில் திருமணம்?

  • IndiaGlitz, [Wednesday,June 08 2016]

'கண்ணா லட்டு தின்ன ஆசையா', வாலிப ராஜா' உள்பட பல படங்களில் நடித்த நடிகை விசாகா சிங் நடிகையாக மட்டுமின்றி தொழிலதிபராகவும் விளங்கி வருகிறார். தற்போது ரோம் நகரில் இருக்கும் விசாகா சிங்கிற்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
விசாகாசிங்கின் குடும்ப நண்பரும், அவரது சகோதரரின் நண்பருமான விக்ராந்த் ராவ் என்பவரை விசாகா சிங் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் விக்ராந்த் ராவ் பிறந்த நாளுக்கு தனது சமூக வலைத்தளத்தில் விசாகா சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரோம் நகரில் மார்க்கெட்டிங் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறாராம் விக்ராந்த் ராய். இதுகுறித்து விசாகாசிங் தரப்பில் விசாரித்தபோது அவருடைய திருமணம் இன்னும் சில வருடங்கள் கழித்தே நடைபெறும் என்றும் முறைப்படி மாப்பிள்ளை யார் என்பதை விசாகா சிங் அறிவிப்பார் என்றும் கூறப்பட்டது.

More News

ரஜினி-விஜய் இசையமைப்பாளருடன் 3வது முறையாக இணையும் சித்தார்த்

பா.ரஞ்சித் இயக்கிய 'அட்டக்கத்தி' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான சந்தோஷ் நாராயணன் ஒருசில வருடங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...

விஜய் சேதுபதி-கே.வி.ஆனந்த் படத்தின் நாயகி இவர்தான்

கோ, அயன், அனேகன் உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்...

சதுரங்க வேட்டை' நாயகி மாயமானது ஏன்? புதிய தகவல்கள்

'சதுரங்க வேட்டை' படத்தில் நடித்த நடிகை இஷாரா, தற்போது 'எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா' என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்...

'விஜய் 60' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே?

கடந்த தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியான விஜய்யின் 'தெறி' சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் தற்போது அவர் தனது 60வது படத்தில் பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார்...

பாலியல் தொழிலாளி வேடத்தில் 'கபாலி' நடிகை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள தன்ஷிகாவுக்கு தற்போது வாய்ப்புகள் குவிந்து வருகிறது அனைவரும் தெரிந்ததே...