பேய் வேடத்தில் நடிக்கும் சந்தானம் நாயகி

  • IndiaGlitz, [Wednesday,October 07 2015]

கடந்த இரண்டு வருடங்களாக கோலிவுட் திரையுலகை பேய் பிடித்து ஆட்டி வருகிறது. டார்லிங், காஞ்சனா 2, டிமாண்ட்டி காலனி முதல் 'மாயா' வரை கிட்டத்தட்ட அனைத்து பேய்ப்படங்களும் சூப்பர் ஹிட் ஆவதால், விதவிதமான பேய்ப்படங்களை இயக்க அறிமுக இயக்குனர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா', 'வாலிப ராஜா', 'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' போன்ற பல ஜாலியான படங்களில் நடித்த நடிகை விசாகாசிங் முதன்முதலாக ஒரு சீரியஸான திகில் படத்தில் நடித்து வருகிறார். அதுவும் யாரும் எதிர்பாராத பேய் வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

அறிமுக இயக்குனர் மணிஷர்மா இயக்கி வரும் பேய்ப்படம் 'பயம் ஒரு பயணம். நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் பரத் நடித்துள்ளார். விசாகா சிங் இந்த படத்தில் முதன்முதலாக பேயாக வருவதாகவும், ஆனால் இந்த பேய் இதுவரை மற்ற படங்களில் வந்த பேய்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமானது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தின் இன்னொரு முக்கிய கேரக்டரில் மீனாட்சி தீக்சித் நடித்து வருகிறார்.

முழுக்க முழுக்க மூணாறு பகுதியில் படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடியுந்தருவாயில் இருப்பதாகவும் இன்னும் ஒருசில காட்சிகள் படமாக்கப்பட்டவுடன் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்துவிடும் என்று கூறிய மணிஷர்மா, விரைவில் இந்த படத்தை ரிலீஸ் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.