விஷால்-கார்த்தி பட இயக்குனருக்கு திருமணம்: நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரல்!

விஷால், கார்த்தி பட இயக்குனருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் அவருடைய நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

விஷால் நடித்த ’இரும்புத்திரை’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குநர் பிஎஸ் மித்ரன். இந்த படத்தில்தான் ஆக்சன் கிங் அர்ஜுன் வில்லனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து சிவகார்த்திகேயன் நடித்த’ஹீரோ’ என்ற படத்தை இயக்கினார். இதனை அடுத்து தற்போது அவர் கார்த்தி நடித்து வரும் ’சர்தார்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இயக்குனர் பிஎஸ் மித்ரனுக்கு ஊடகவியலாளர் ஆஷா மீரா ஐயப்பன் என்பவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது இந்த நிச்சயதார்த்த விழாவில் இயக்குனர் ’இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிக்குமார் கலந்து கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.