நயன்தாராவுடன் மோதும் விஷால்.. வெற்றி யாருக்கு?

  • IndiaGlitz, [Friday,November 18 2022]

நயன்தாரா நடித்த திரைப்படம் வெளியாகும் நாளில் விஷால் நடித்த திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் மோதுவதால் வெற்றி யாருக்கு என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

நயன்தாரா நடித்த ’கனெக்ட்’ என்ற திரைப்படத்தின் டீசர் இன்று வெளியான நிலையில் இந்த படம் வரும் டிசம்பர் 22ஆம் தேதி கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீஸர் வெளியான பிறகு இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஷால் நடித்த ’லத்தி’ திரைப்படம் அதே டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நயன்தாராவின் கனெக்ட் மற்றும் விஷாலின் ’லத்தி’ ஆகிய இரண்டு படங்களில் எந்த படம் சூப்பர் ஹிட் ஆகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

யுவன்சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள ’லத்தி’ படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என 4 மொழிகளில் உருவாகியுள்ளது. விஷால், சுனைனா நடிப்பில் வினோத்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லத்தி’ திரைப்படத்தை விஷாலின் நெருங்கிய நண்பர்களான ராணா மற்றும் நந்தா தயாரித்து உள்ளனர்.

More News

ஜெயிலிலும் ஒன்றாகவே ராபர்ட்-ரக்சிதா: வீடியோ வைரல்

பிக்பாஸ் போட்டியாளர்களான ராபர்ட் மற்றும் ரக்சிதா ஆகிய இருவரும் சிறைக்கு அனுப்பப்படும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தாடி பாலாஜி - நித்யா போல் இன்னொரு கணவன் - மனைவியா? களை கட்டப்போகும் பிக்பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தாடி பாலாஜி மற்றும் நித்யா தம்பதிகள் ஒரே சீசனில் கலந்து கொண்டார்கள் என்பதும் அவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்த நிலையில் இருவரையும் கமல்ஹாசன்

இந்த வாரம் எவிக்சன் இவர் தான்.. வெளியே போனதும் முதலில் இதை செய்வாரோ?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று 40வது நாள் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

'மாயா' போலவே செம த்ரில்லிங்.. நயன்தாராவின் 'கனெக்ட்' டீசர்

லேடி சூப்பர்ஸ்டார் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று 'கனெக்ட்' என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

பிறந்த நாளில் நயன்தாராவின் புதிய பட அறிவிப்பு: இயக்குனர் இந்த பிரபலமா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 38 வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.