உலகத்தை அழிக்க வந்த கொடூர வில்லன்கள் வைரஸ்? என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
உயிரினத்தை தாக்கும் நுண்ணுயிர் கிருமிகள்தான் இந்த பாக்டீரியாவும், வைரஸ்ஸும். ஆனால் பாக்டீரியாவை விட வைரஸ்கள் வில்லாதி வில்லன்களாக செயல்படுகின்றன. அதற்கு காரணம் இந்த வைரஸ்களில் நல்லது என ஒன்று இல்லவே இல்லை. இதற்கு மாறாக பாக்டீரியாவில் ஹீரோவும் உண்டு, வில்லனும் உண்டு.
நல்ல பாக்டீரியாக்கள் உணவு செரிமானத்துக்கும் பால் போன்ற பொருட்கள் திரிந்து போவதற்கும் பயன்படுகின்றன. ஆனால் கெட்ட பாக்டீரியாக்கள் டிபி போன்ற உயிர்க்கொல்லி நோயை உண்டாக்கும் அளவிற்கு சக்தி வாய்ந்தவையாக செயல்படுகின்றன. அதேபோல பாக்டீரியாக்கள் கடும் குளிரிலும், வெயிலிலும் தனித்து உயிர்வாழும் தன்மை கொண்டவை. இது மனித உடலின் மேலும், உடலுக்குள்ளும் வாழும் தன்மைக் கொண்டவை.
ஆனால் இதற்கு எதிர்மாறாக இருக்கும் வைரஸ்கள் ஒருபோதும் மனித குலத்திற்கும் மற்ற உயிரினங்களுக்கும் நன்மையே செய்யாது. இதற்கு தெரிந்தது எல்லாம் குறைந்த பாதிப்பை கொடுப்பது. அல்லது கொரோனா போன்ற பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுவது. அந்த வகையில் இந்த வைரஸ்கள் தொடர்ந்து மனிதக் குலத்தை கொடூரமாகத் தாக்கி வருகின்றன.
மேலும் இந்த வைரஸ்களால் தனித்து இயங்க முடியாது என்பதும் குறிப்பிடத்தகக்து. இது மனித செல்கள் அல்லது விலங்கு செல்களை தாக்கி அதில் இனப்பெருக்கத்தை செய்து வாழும் தன்மை கொண்டவை. இதனால்தான் வைரஸ்கள் தாக்கும்போது ஒட்டுமொத்த மனித செல்களும் அதன் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடுகிறது.
இப்படி நடக்காமல் இருக்க நமது நோய் எதிர்ப்பு மண்டலம் தொடர்ந்து போராடும். ஆனால் இந்த வைரஸ் வில்லத்தனமானது. தொடர்ந்து தனது இனப்பெருக்கத்தை செய்து அந்த நோய் எதிர்ப்பு மண்டலத்தையே காலி செய்து விடும் தன்மைக் கொண்டதாக இருக்கிறது. இதற்காகத்தான் மனிதனுக்கு குறைந்த வைரஸ் கொண்ட தடுப்பூசிகளை செலுத்தி நோய் எதிர்ப்பு மண்டலத்தை அந்த வைரஸ்க்கு எதிராக போராட வைக்கிறோம்.
வைரஸ் அளவு
நமது உடலில் உள்ள ஒரு செல்லின் அளவு ஒரு மில்லி மீட்டரில் நூறில் ஒரு மடங்குதான். அதில் பத்தில் ஒரு மடங்காக பாக்டீரியா இருக்கிறது. அந்த பத்திலும் ஒரு மடங்காக கொரோனா போன்ற வைரஸ்கள் இருக்கின்றன. ஆனால் இந்த ரைவஸ்க்கு தனியாக எந்த மரியாதையும் கிடையாது. செல்லுக்கு வெளியே தேவையில்லாத ஒரு பொருளாக, ஒரு ஒட்டுண்ணியாக வாழும் இந்த வைரஸ் மனிதச் செல்லின் புரதத்தைப் பயன்படுத்தி மனித உடலுக்கு உள்ளே நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தும்போதுதான் ஒரு தேர்ந்த வில்லனாக மாறுகிறது.
மனிதச் செல்கள் பொதுவாக இயங்குவதற்குத் தேவையான புரதப் பொருள்கள் மற்றும் ஆக்சிஜன் போன்றவற்றை வெளியே இருந்து எடுத்துக் கொள்கிறது. அதே போல கழிவுகளை வெளியேற்றவும் செய்கிறது. இதற்காக ஒவ்வொரு செல்லிலும் கதவு போன்ற ஒரு அமைப்பு இருக்கும். தேவை ஏற்படும்போது இந்தக் கதவு திறந்து பின்பு மூடிக்கொள்ளும். செல்களுக்குத் தேவையான சரியான புரதப் பொருட்கள் கிடைக்கும்போது அவற்றை ஏற்பதற்கு கைப்பிடி போன்ற ஏற்பிகளும் இந்தச் செல்களில் இருக்கும்.
மேலும் புரதங்களின் வடிவில் ஒரு பகுதி சாவி போன்றே இருக்கும். நல்ல புரதங்கள் இந்த கதவுக்குள் நுழையும் போது சாவி போன்ற அமைப்பினால் எளிதாக உள்ளே நுழைந்து அதன் இயக்கத்தை தொடங்கும். செல்லின் இத்தகைய கதவு, சாவி, கைப்பிடி அமைப்பில் ஒரு கள்ளச்சாவி தான் வைரஸ் கிருமி.
கள்ளச்சாவி
எப்படி புரதங்கள் சாவி போன்ற அமைப்பை வைத்திருக்கிறதோ அதோபோல இந்த வைரஸ்களும் கள்ளச்சாவி போன்ற RBD புரதம் மற்றும் செல்சுவரின் கதவைத் திறக்கும் சாவி அமைப்பை கொண்டிருக்கின்றன. செல்களில் நடக்கும் இயல்பான நடவடிக்கைகளில் இந்தக் கள்ளச்சாவி போட்டு உள்ளே நுழைந்து விடுகிறது கொரோனா போன்ற வைரஸ்.
ஆனால் எல்லா வைரஸ்களும் எல்லா கதவுகளுக்குள்ளும் (ஓம்புயிரி செல்கள்) நுழைய முடியாது. எனவே தான் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பல வைரஸ்கள் மனிதர்களை தாக்குவதில்லை. மனிதச் செல்களில் (ஓம்புயிரி செல்கள்) கள்ளச்சாவி போட்டு (RBD புரதம் போன்ற கதவைத் திறக்கும் சாவி) நுழைந்து விடும் வைரஸ்கள் மட்டுமே மக்களுக்கு நோய் தொற்றை வரவழைக்கிறது.
தற்போது கொரோனா வைரஸிடம் மனிதன் மற்றும் விலங்குகளில் உள்ள செல்களில் புரதத்தை பற்றிக்கொள்ளும் கள்ளச்சாவி இருக்கிறது. அந்தக் கள்ளச்சாவி தான் SARS-CoV-2 ஆகும். கொரோனா வைரஸிடம் உள்ள கள்ளச்சாவி அதாவது அதன் வடிவம் ஒரு மென்மையான பூப்பந்து போலவும் அதைச்சுற்றி சூரியக் கதிர்கள் போல முட்களும் இருக்கின்றன. இந்த முட்கள் அதாவது புரதத்தைக் கொண்டு நமது செல்லுக்குள் உள்ளே நுழைந்து விடுகிறது. நுழைந்த வைரஸ்கள் ஒவ்வொரு செல்லாக அனைத்து செல்லிலும் பரவி உடலில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.
கொரோனா நோய்த்தொற்றுக்குச் சிகிச்சை அளிக்கும்போது செல்களை பலம் இழக்கச் செய்யும் கொரோனா வைரஸை அழிக்க மட்டும்தான் நாம் தற்போது சிகிச்சை அளிக்கிறோம். கூடவே கொரோனாவினால் மனிதச் செல்கள் பலம் இழந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய அவசியமும் நமக்கு இருக்கிறது என்பதை மருத்துவ உலகம் தற்போது புரிந்து கொண்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments