ஆக்சிஜன் இன்றி வராண்டாவில் சுருண்டு கிடக்கும் கொரோனா நோயாளிகள்…பகீர் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆக்சிஜன் இல்லை எனக் கூறும் தனியார் மருத்துவமனைகளின் மீது கடும் நடவடிக்கை, அதோடு ஆக்சிஜன் தேவை என டிவிட்டரில் பதிவிடும் இளைஞர் மீது கிரிமினல் வழக்கு இப்படி அதிரி புதிரி நடவடிக்கை எடுத்து வரும் உத்திரப்பிரதேச மாநிலத்தில் தற்போது ஊரக மருத்துவமனைகளில் நிலவி வரும் கொடுமைகளுக்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டு இருப்பதாகத் தற்போது ஊடகங்கள் சுட்டிக் காட்டியுள்ளன.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால் அந்த நோயாளிகளுக்குத் தேவையான படுக்கை வசதியும் இல்லை, சுகாதார மற்றும் ஆக்சிஜன் வசதியும் இல்லை. இந்நிலைமைதான் மாநிலம் முழுவதும் நிலவுவதாகத் தற்போது ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
அதிலும் பாலியா, காஜிப்பூர் எனும் 2 மாவட்டங்களில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய கொரோனா நோயாளிகள் உருவாகி இருப்பதாக ஊடகங்கள் சுட்டிக் காட்டியுள்ளன. இப்படி மாவட்டம் முழுவதும் கொரோனா நோயாளிகளி பெருகி, மருத்துவமனைகளுக்கு வரும் அவர்களுக்கு படுக்கை வசதியும் இருப்பது இல்லை. இதனால் வராண்டாவில் சுருண்டு கிடக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. அதோடு மூச்சுத் திணறல் ஏற்பட்டால் கவனிக்கக்கூட ஆள் இல்லாமல் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது.
பாலியாவில் உள்ள மருத்துவமனையில் வெறும் 255 படுக்கைகள் மட்டுமே உள்ளன. அதேபோல காஜிப்பூரில் 900 படுக்கைகள் மட்டும்தான். இந்தப் படுக்கைகளிலும் நிலத் தகராறு காரணமாக ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டு வருபவர்கள் காயத்துடன் அவசர சிகிச்சை பிரிவில் படுத்துக் கொள்வதாக மருத்துவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை கிடைக்காமல் வராண்டாவிலேயே சிகிச்சை தொடருகிறது.
இப்படி வராண்டாவில் இருக்கும் நோயாளிகளுக்கு எப்படி ஆக்சிஜன் கொடுப்பது? இது அடுத்த சிக்கல். மேலும் அங்கு நிலவும் மருத்துவர்களுக்கான பற்றாக்குறையும் தற்போது புதிய நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் உத்திரப்பிரதேச மாநிலத்தில் தற்போது கடும் சுகாதாரத் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாகப் பலரும் விமர்சனம் வைத்து வருகின்றனர். அதுவும் தற்போது ஊடகங்கள் வெளியிட்டு இருக்கும் சில புகைப்படங்களால் இந்த விமர்சனம் மேலும் அதிகரித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments