'விருமன்' லாபத்தை நடிகர் சங்கத்திற்கு கொடுத்த சூர்யா... எவ்வளவு கொடுத்தார் தெரியுமா?

  • IndiaGlitz, [Sunday,August 14 2022]

சூர்யா தயாரிப்பில் கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான ’விருமன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது தெரிந்ததே.

இந்தப் படத்திற்கு நீண்ட விடுமுறை கிடைத்ததை அடுத்து இந்த படத்தின் 4 நாள் வசூல் பெரிய சாதனையை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ’விருமன்’ திரைப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் கொண்டாடப்பட்ட நிலையில் தற்போது ’விருமன்’ படத்தில் கிடைத்த லாபத்தின் ஒரு பகுதியை தயாரிப்பாளர் சூர்யா நடிகர் சங்கத்துக்கு கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

’விருமன்’ திரைப்படம் இதுவரை 8.2 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படும் நிலையில் நடிகர் சங்கத்தின் கட்டிடம் கட்டுவதற்காக ரூபாய் 25 லட்சத்தை சூர்யா, நடிகர் சங்கத்தின் தலைவர் நாசரிடம் வழங்கி உள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சூர்யாவுக்கு ’சூரரைப்போற்று’ படத்திற்காக தேசிய விருது கிடைத்ததை அடுத்து நடிகர் சங்கம் பாராட்டு தெரிவித்ததோடு நினைவு பரிசு வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.