இயக்குனர் ஷங்கருடன் 'விருமன்' முதல் காட்சியை பார்த்தாரா தளபதி விஜய்?
- IndiaGlitz, [Friday,August 12 2022]
கார்த்தி நடித்த ‘விருமன்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது என்பதும் முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவான ‘விருமன்’ திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் மட்டுமின்றி பல திரையுலக பிரபலங்களும் திரையரங்குகளில் வருகை தந்துள்ளனர்.
குறிப்பாக தனது மகளின் முதல் படத்தை பார்ப்பதற்காக இயக்குனர் ஷங்கர் தனது குடும்பத்துடன் திரையரங்கிற்கு வந்திருந்தார். ஷங்கரின் குடும்பத்தினர்களுடன் விஜய்யின் மனைவி சங்கீதா விஜய்யும் வந்து இருந்ததாக தெரிகிறது. தளபதி விஜய் ’வாரிசு’ படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் அவர் வரவில்லை என்று கூறப்படுகிறது.
ஷங்கர் இயக்கிய ’நண்பன்’ படத்தில் விஜய் நடித்ததில் இருந்தே விஜய் குடும்பத்தினரும் ஷங்கர் குடும்பத்தினரும் நெருக்கமாக இருந்து வருவதை அடுத்து ஷங்கர் குடும்பத்தினருடன் சங்கீதா விஜய், ‘விருமன்’ படம் பார்க்க வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.