எம்ஜிஆர் படத்தை பார்த்து விசிலடித்த எனக்கு விசில் சின்னம்: பிரபல காமெடி நடிகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
எம்ஜிஆர் படங்களை பார்த்து விசிலடித்த எனக்கு விசில் சின்னம் கிடைத்துள்ளது என சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் பிரபல காமெடி நடிகர் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகின் பிரபல காமெடி நடிகர்களில் ஒருவர் மயில்சாமி. இவர் அதிமுகவில் தீவிர தொண்டராக இருந்த நிலையில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் இருந்து விலகிய இருந்தார்.
இந்த நிலையில் தற்போது நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் இந்த தொகுதியில் மிகவும் பிரபலம் என்பது மட்டுமின்றி அந்த தொகுதியில் உள்ள மக்களுக்கு பல்வேறு சமூக சேவைகளை விளம்பரம் இன்றி செய்துள்ளார். இதனால் அனைத்து கட்சியில் உள்ளவர்களும் தனக்கு கட்சி வேறுபாடின்றி ஓட்டு போடுவார்கள் என்ற நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டிருந்தது. அந்த வகையில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மயில்சாமிக்கு விசில் சின்னம் கிடைத்துள்ளது. இதுகுறித்து அவர் வீடியோ ஒன்றில் கூறியபோது ’எம்ஜிஆர் படத்தை பார்த்து பலமுறை நான் விசில் அடித்திருக்கின்றேன். அப்படிப்பட்ட எனக்கு விசில் சின்னமே கிடைத்துள்ளது பெருமையாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
சென்னை விருகம்பாக்கம் சுயேச்சை வேட்பாளர் நடிகர் மயில்சாமிக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு. pic.twitter.com/sI6fbtiQuY
— meenakshisundaram (@meenakshinews) March 23, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com