அங்கன்வாடி பள்ளியில் கலெக்டர் மகள்: ஆச்சரியத்தில் பொதுமக்கள்

  • IndiaGlitz, [Saturday,February 17 2018]

நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களே இந்த காலத்தில் ஆயிரக்கணக்கிலும், லட்சக்கணக்கிலும் கட்டணம் கட்டி தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜியில் சேர்த்து வரும் நிலையில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிவஞானம் தனது செல்ல மகளை அரசு அங்கன்வாடி மையத்தில் சேர்த்துள்ளார். மேலும் அவரே தினமும் அங்கன்வாடி மையத்துக்கு வந்து தனது குழந்தையை அழைத்து வருகிறார். இதனை அந்த பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்

இதுகுறித்து  விருதுநகர் அங்கன்வாடி மைய ஊழியர்கள் கூறியபோது, 'கலெக்டர் அவர்கள் தனது குழந்தையை எங்கள் அங்கன்வாடியில் சேர்த்தது எங்கள் அனைவருக்கும் பெருமையாக உள்ளது. அவரை பின்பற்றி அனைத்து அரசு ஊழியர்களும் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையத்தில் சேர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றோம்' என்று கூறினர்

மேலும் விருதுநகர் கலெக்டர் சிவஞானம், அருகில் உள்ள கிராமங்களில் நடைபெறும் குறைதீர்க்கும் கூட்டங்களுக்கு தனது அதிகாரிகளுடன் அரசு பேருந்தில் செல்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தளபதி விஜய்க்கு இன்று முக்கியமான நாள்! எப்படி தெரியுமா?

அடுத்த சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை நெருங்கி கொண்டிருக்கும் தளபதி விஜய், தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் என்பது தெரிந்ததே.

கமல்ஹாசனின் முதல் அரசியல் பொதுக்கூட்டத்தில் திடீர் மாற்றம்

நடிகர் கமல்ஹாசன் வரும் 21ஆம் தேதி தனது அரசியல் கட்சியின் பெயரை இராமநாதபுரத்தில் உள்ள அப்துல்கலாம் இல்லத்தில் அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்

சிவகார்த்திகேயனின் பட டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கோலிவுட் திரையுலகில் மிகக்குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இணைந்து ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பிரபல தென்னிந்திய நடிகை

இன்று பிறந்த நாள் கொண்டாடி வரும் பிரபல நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படமான 'சீம்ராஜா' படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

காவிரி தீர்ப்பு குறித்து ரஜினி என்ன சொன்னார் தெரியுமா?

தமிழகம், கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக நடந்து வந்த காவிரி பிரச்சனைக்கு இன்று சுப்ரீம் கோர்ட் இறுதி தீர்ப்பு வழங்கியது.