விருச்சிக ராசி பலன்கள் 2024 ஜூலை முதல் செப்டம்பர் வரை ஆதித்ய குருஜி கணிப்பு !

  • IndiaGlitz, [Tuesday,July 02 2024]

ஆன்மீககிளிட்ஸ் யூடியூப் சேனலில், பிரபல ஜோதிடர் ஆதித்ய குருஜி அவர்கள் 2024ம் ஆண்டு ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான விருச்சிக ராசி பலனை கணித்துள்ளார். பொதுவாக இந்த மூன்று மாதங்களில் எந்த ராசிக்கும் பெரிய பாதிப்புகள் இல்லை என்றும், அனைத்து கிரகங்களும் நல்ல நிலையில் இருப்பதால் நல்ல பலன்களே கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த மூன்று மாதங்கள் மிகவும் சிறப்பானவை என்று ஆதித்ய குருஜி கணித்துள்ளார். ஜூலை 12ம் தேதி முதல் ராசி அதிபதி பார்வையால் மங்கள யோகம் ஏற்படும். மேலும் குரு பகவானின் பார்வையும் சேர்ப்பதால் இரண்டு யோகங்களின் பலன்கள் கிடைத்து, திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும். அனைத்து விருச்சிக ராசி அன்பர்களுக்கும் இந்த மூன்று மாதங்கள் நல்ல பலன்களைத் தரும். சிறிய அளவிலான சிரமங்கள் இருந்தாலும், அவை தாங்கிக் கொள்ளக்கூடியவை. 2012ம் ஆண்டு முதல் அனுபவித்து வந்த கஷ்டங்கள் இனி இருக்காது. இந்த காலகட்டத்தில் நீங்கள் மிகவும் ஆளுமைத் திறன்மிக்கவராக இருப்பீர்கள். செப்டம்பர் மாதம் முதல் இரண்டு வாரங்கள் தொழிலில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். இது உங்களுடைய பொற்காலம் என்று கூட சொல்லலாம். குடும்ப உறவுகள் மேம்படும். சொந்த தொழில் தொடங்க முயற்சிப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். போட்டிகளில் கலந்து கொண்டால் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என்று ஆதித்ய குருஜி அவர்கள் கூறுகிறார்.

More News

துலாம் ராசி பலன்கள் 2024 ஜூலை முதல் செப்டம்பர் வரை ஆதித்ய குருஜி கணிப்பு !

ஆன்மீககிளிட்ஸ் யூடியூப் சேனலில், பிரபல ஜோதிடர் ஆதித்ய குருஜி அவர்கள் 2024ம் ஆண்டு ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான துலாம் ராசி பலனை கணித்துள்ளார்.

பீரியட்ஸ் இருந்தாலும் கோவிலுக்கு போவேன்.. 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகையின் போல்டான பேட்டி..!

பீரியட் நேரமாக இருந்தால் கூட கோவிலுக்கு செல்வேன் என்று 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் நடித்த நடிகை சமீபத்தில் போல்டாக பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'குக் வித் கோமாளி' கடந்த வார எபிசோடில் கலந்து கொள்ளாதது ஏன்? ஜோயா கூறிய அதிர்ச்சி காரணம்.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி ' சீசன் 5 விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் கடந்த வார எபிசோடில் ஜோயா கலந்து கொள்ளாதது

இந்த மூன்றில் ஒன்று தான் எனது அடுத்த படம்.. அதில் ஒன்று ஜேம்ஸ்பாண்ட் கதையா? ஷங்கர் தந்த ஆச்சரியம்..!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய கமல்ஹாசனின் 'இந்தியன் 2' திரைப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவர் இயக்கத்தில் உருவாகி வரும் இன்னொரு படமான ராம்சரணின்

தியேட்டரில் சக்கை போடு போட்ட 'கருடன்'.. மூன்று ஓடிடியில் ரிலீஸ்.. தேதியும் அறிவிப்பு..!

சூரி நடித்த 'கருடன்' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது அது மட்டும் இன்றி உலகம் முழுவதும் இந்த படம் 50 கோடி ரூபாய்க்கும்