விரலை விட்டு பெண்ணின் கன்னித்தன்மையை சோதிக்கும் கொடூரம்… இராணுவத்தில் இப்படியுமா?
- IndiaGlitz, [Saturday,August 14 2021]
இந்தோனேசிய இராணுவத்தில் சேரும் பெண்களுக்கு உலகத்திலேயே கொடூரமான ஒரு சோதனை முறை இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்ததாகத் தகவல் கூறப்படுகிறது.
அதாவது இந்தோனேசிய இராணுவத்தில் சேரும் பெண்களின் ஒழுக்கத்தை முழுவதும் தெரிந்து கொள்வதற்காக அந்தப் பெண்ணின் பிறப்புறுப்பில் இரண்டு விரல்களைவிட்டு கன்னித்திரை கிழிந்து விட்டதா? எனச் சோதித்துப் பார்ப்பார்களாம். அப்படி ஒருவேளை கிழிந்து இருந்தால் அவர்கள் இராணுவத்தில் சேருவதற்கு தகுதியில்லை என முடிவுக்கட்டப்படுமாம்.
காட்டுமிராண்டித்தனமான இந்த சோதனை முறைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த சோதனை முறை விலக்கிக் கொள்ளப்பட்டு விட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இதைத்தவிர ஒரு பெண் உடலுறவு வைத்துக்கொண்டாரா? என்பதை அவரது கன்னித்திரையை வைத்து முடிவு செய்யமுடியாது. சிலருக்கு உடலுறவு கொண்டாலும் கன்னித்திரை விலகாமல் இருக்கும். அதோடு இது அறிவியல் அடிப்படையிலான சோதனை முறையில்லை எனக் WHO கூறி இருந்தது.
இதையடுத்து இராணுவத்தில் சேரும் பெண்களுக்கு இருவிரல்களை விட்டு அவர்களின் கன்னித்தன்மையை சோதனை செய்யும் முறை இந்தோனேசியாவில் முடிவுக்கு வந்துவிட்டதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். ஆனால் இராணுவத்தைத் தவிர கப்பற்படை, விமானப்படைகளில் இந்த சோதனை முறை முடிவுக்கு வந்துவிட்டதா என்பதைக் குறித்த தகவல் எதுவும் இல்லை.