திவாலாகி விடுவோம் போல… பாதுகாப்பு வேணும்… நிதிமன்றத்தை நாடியிருக்கும் பிரபல விமான நிறுவனம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்காவில் இயங்கிவரும் பிரபல விமான சேவை நிறுவனமான விர்ஜின் அட்லாண்டிக் நிறுவனம் தற்போது அமெரிக்க நீதிமன்றத்தில் ஒரு விசித்திரமான மனு ஒன்றை அளித்து இருக்கிறது. அந்த மனுவில் கொரோனா தாக்கத்தால் எங்களுடைய நிறுவனம் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே கடன் சுமை அதிகரித்து இருப்பதால் பல ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலையைவிட்டு நீக்கிவிட்டோம். குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்டு விமான நிறுவனத்தை இயக்கி வருகிறோம். அந்த குறைந்த பணியாளர்களுக்கும் அடுத்த மாதம் சம்பளம் கொடுக்கக் கூட எங்களிடம் பணம் இல்லை. விமானத்தின் பராமரிப்புக்கூட பணமில்லாத நிலையில் இருக்கும்போது கடன் காரர்கள் நெருக்குதல் கொடுக்கின்றனர்.
இதனால் மேலும் மறுகட்டமைப்பு செய்ய வெவ்வேறு வழிமுறைகளில் கடன் வாங்க உத்தேசித்துள்ளோம். அந்தக் கடன் தொகை வருகிற அக்டோபரில்தான் கைக்கு கிடைக்கும். அதுவரை எங்களுடைய விமான நிறுவனத்தின் சொத்துகளையும் விமானங்களையும் திவாலாகி விடாமல் இருக்க எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரியிருக்கிறது. விர்ஜின் அட்லாண்டிக் நிறுவனம் இங்கிலாந்தை சார்ந்த ரிச்சர்ட் பான்சன் என்பவரால் தொடங்கப்பட்டது. 51 பங்குகள் விர்ஜின் அட்லாண்டிக் விமான நிறுவனத்திற்கும் 49 சதவீத பங்குகள் டெல்டா நிறுவனத்திற்கும் சொந்தமானது. இதனால் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளின் நீதிமன்றங்களில் தற்போது மனு அளிக்கப்பட்டு இருக்கிறது.
ஏற்கனவே இந்நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தங்களது வேலைகளை இழந்து தவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நிறுவனமே திவலாகி விடும் என பயந்து நீதிமன்றத்தை நாடியிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது கொரோனா காலத்தில் விமான சேவை நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அந்நிறுவனங்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments