பும்ராவுக்கும் நடராஜனுக்கும் இத்தனை ஒற்றுமையா??? புள்ளிவிரவரத்தை அள்ளி வீசும் முன்னாள் வீரர்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக அறிமுகமாகி இருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த T.நடராஜன். நடந்து முடிந்த 2020 ஐபிஎல் போட்டியில் சிறந்த யாக்கர்களை வீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இதனால் இந்திய அணியில் விளையாடுவதற்காக வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்படி வழங்கப்பட்ட வாய்ப்பினால் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு விளையாடினார். அந்தப் போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தார்.
அடுத்து ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்று வரும் டி20 போட்டிகளிலும் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். நேற்று நடைபெற்று முடிந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் நடராஜன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு அதிகபடியான வெற்றி வாய்ப்பினை உறுதி செய்தார். இதனால் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்று பாராட்டு அளவிற்கு பெரும்பாலானவர்களின் கவனத்தையும் ஈர்ந்து உள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான எந்தப் போட்டியிலும் நட்சத்திர வீரரான பும்ரா இடம்பெற வில்லை. ஆனாலும் இருவருக்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள் இருக்கிறது என முன்னாள் கிரிக்கெட் வீரரான ஷேவாக் பட்டியலிட்டு உள்ளார். அந்தப் பட்டியல் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அதில் 1.இருவரும் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதால் மாற்றுவீரர்களாக அணியில் இடம் பெற்றவர்கள். 2.இருவருக்கும் ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அறிமுகமானார்கள். 3.இருவரும் ஒரு நாள் தொடரின் கடைசி போட்டியில் அறிமுகமானவர்கள். 4.இருவரும் அறிமுகமான கடைசி ஒரு நாள் போட்டியே அந்தத் தொடரில் இந்திய அணிக்கு வெற்றியாக அமைந்தது. 5.இருவரும் அறிமுகமான ஒரு நாள் போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 6.இருவரும் அறிமுகமான டி20 போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர் என ஷேவாக் அடுக்கடுக்கான ஒற்றுமைகளை பட்டியல் இட்டு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இந்தப் பட்டியல் கடும் வியப்பை ஏற்படுத்துகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com