ஐ.பி.எல்- கேப்டன் பதவியையும் துறந்த விராட் கோலி… ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஐ.பி.எல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணியின் கேப்டனாகப் பதவி வகித்துவரும் விராட்கோலி 14ஆவது சீசன் போட்டிகள் முடிந்தவுடன் கேப்டன் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக திடீர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியை வெளியிட்டு வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாக விராட் கோலியின் கேப்டன்ஷி குறித்த செய்திகளே ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகின்றன. காரணம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, ஒருநாள் போட்டி மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகள் என இந்தியக் கிரிக்கெட்டின் 3 வித போட்டிகளுக்கும் தலைமை தாங்கிவரும் விராட்கோலி இதுவரை இந்திய அணிக்காக ஒரு ஐசிசி கோப்பையைக்கூட வென்றுதரவில்லை என்று கடும் விமர்சனம் வைக்கப்பட்டது.
அதோடு சாம்பியன் டிராபி, 50 ஓவர் உலகக்கோப்பை தொடர், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் என முக்கியப் போட்டிகளில் அவர் சொதப்பி விடுகிறார் என்ற குற்றச்சாட்டும் அடுக்கடுக்காக வைக்கப்பட்டு வந்தன. இதைத்தொடர்ந்து டி20 உலகக்கோப்பை போட்டி முடிந்தவுடன் டி20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகிக்கொள்வதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு விராட் கோலி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
விராட் கோலி டி20 போட்டிகளில் நல்ல வெற்றி சதவீதத்தை வைத்திருந்தாலும் 3வித கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக இருப்பது கடும் வேலைப்பளுவை கொடுக்கிறது எனக்கூறி இந்த முடிவை எடுத்ததாக விளக்கம் அளித்து இருந்தார். இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் பெங்களூரூ அணிக்கான கேப்டன் பதவியில் இருந்தும் விலகிக்கொள்வதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
காரணம் விராட் கோலி தலைமையில் விளையாடி வரும் பெங்களூரூ அணி இதுவரை ஒருமுறை கூட ஐ.பி.எல் சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை. இதுகுறித்து விமர்சனம் வைக்கப்பட்ட நிலையில் விராட் கோலி இந்த திடீர் அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். மேலும் தனது முடிவு குறித்து பேசிய அவர், “ஆர்.சி.பி அணியின் கேப்டனாக இதுதான் என்னுடைய கடைசி ஐ.பி.எல். என்னுடைய கடைசி ஐ.பி.எல் போட்டி வரையில் நான் பெங்களூரூ அணியின் வீரனாகத் தொடர்வேன். எனக்கு ஆதரவு மற்றும் என்னை நம்பிய அனைத்து ஆர்.சி.பி ரசிகர்களுக்கும் என்னுடைய நன்றி” என்று தெரிவித்துக் கொண்டுள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் பெங்களூரு அணி வெற்றிக்கரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும் முக்கியமான ப்ளே ஆஃப் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வந்தது. இதனால் ஒருமுறைகூட சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியவில்லை. ஆனால் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2021 போட்டிகளில் பெங்களூர் ஆர்.பி.சி இதுவரை நடைபெற்ற 7 போட்டிகளில் 5 முறை வெற்றிப் பெற்றுள்ளது.
மேலும் இதுவரை பந்துவீச்சில் சொதப்பி வந்த இந்த அணி இந்த முறை திறமையான பந்துவீச்சாளர்களுடன் போட்டியை எதிர்க்கொண்டு வருகிறது. இதனால் 2021 ஐபிஎல் இல் வெற்றிக்கோப்பையை பெற்றுவிடும் என்ற நம்பிக்கைகையும் சில ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கேப்டன் விராட் கோலி தனது கேப்டன் பதவியை துறந்துள்ளார். மேலும் இறுதிவரை ஆர்.சி.பி வீரானாக தொடர்ந்து எனது பங்களிப்பை செலுத்துவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com