ஐபிஎல் கேப்டன்ஷி பதவிக்கும் சிக்கலா? கோலி குறித்த அடுத்த பரபரப்பு!
- IndiaGlitz, [Friday,September 17 2021] Sports News
இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த சில தினங்களாக தலைப்பு செய்திகளில் இடம்பெற்று பரபரப்பை கிளப்பி வருகிறார். இந்நிலையில் 3 வடிவ போட்டிகளுக்கும் கேப்டனாக இருப்பது பெரிய அழுத்தத்தைக் கொடுக்கிறது எனக் கூறி வருகிற டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் டி20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மூத்த வீரர்கள் பலரும் “எந்த சுயநல எண்ணமும் இல்லாமல் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இது வரவேற்கத்தக்கது” என்று புகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் பெங்களுர் ராயல் சேலஞ்சர்ஸ் (ஆர்சிபி) அணிக்கு கேப்டனாக இருந்துவரும் விராட் கோலியின் கேப்டன் பதவி பறிப்போகுமோ? என்ற சந்தேகத்தை சிலர் கிளப்பி வருகின்றனர். காரணம் ஆர்சிபி இதுவரை ஒருமுறை கூட வெற்றிப்பெற வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் அணிகளில் நன்றாக விளையாடி வரும் ஆர்சிபி முக்கியமான ப்ளே ஆஃப் போட்டிகளில் சொதப்பி தனக்கான வெற்றி வாய்ப்பை இதுவரை இழந்துவந்தது. தற்போது ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் அனைத்து ஐக்கிய அமீரகத்தில் வரும் 19 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதுவரை பந்து வீச்சில் செதப்பி வந்த ஆர்சிபி தற்போது சிறப்பான பந்து வீச்சாளர்களுடன் போட்டியை எதிர்கொள்ள உள்ளது. மேலும் கொரோனா நோய்த்தொற்றில் பணியாற்றிய முன்களப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக புது ஜெர்சியை அணிந்து கொண்டு விளையாட உள்ளனர்.
இந்நிலையில் ஏற்கனவே இந்தியாவிற்கு ஐசிசி கோப்பையை வென்றுத்தரவில்லை. 50 ஓவர் உலகக்கோப்பை போட்டி மற்றும் சாம்பியன்ஷிப் போட்டிகளில் சொதப்புகிறார் என்று பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வந்த விராட் கோலி தற்போது பெங்களூர் அணிக்கு வெற்றி வாய்ப்பை பெற்றுத்தருவாரா? அல்லது இந்த கேப்டன் பதவியையும் இழக்க வேண்டி வருமா? என்ற சந்தேகத்தைப் பலரும் கிளப்பி வருகின்றனர்.