விராட் இவரை பாத்து கத்துக்கணும்...! பாகிஸ்தான் பயிற்சியாளர் பேட்டி....!
- IndiaGlitz, [Monday,April 12 2021] Sports News
இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி தலைசிறந்த வீரர் என்பது நமக்கு தெரிந்த ஒன்றே. தல தோனிக்குப்பின், கேப்டனாக பதிவியேற்ற இவரை ரசிகர்கள் பலரும் சின்னத்தல என அன்போடு அழைப்பது வழக்கமான ஒன்றாகும். 254 ஒருநாள் போட்டியிலும், 91 டெஸ்ட் போட்டியிலும் இதுவரை விளையாடிய கோலி, நம்பர் 1 பேட்ஸ்மென்-னாக வலம் வருகின்றார்.
பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஆக்கிப் ஜாவ் விராட் கோலி பற்றி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,
பாகிஸ்தான் அணி வீரர் பாபர் ஆசாம்-இடமிருந்து கோலி சில விஷயங்களை கட்டாயமாக கற்றுக்கொள்ள வேண்டும். பாபர் -சச்சினை போன்ற வீரர், இவரிடம் எந்த வீக்னஸ்-ம் இல்லை என்று கூறியுள்ளார்.
பாபர் கோலியை போல பிட்னெஸ் ஆக இருந்திருந்தால், சிறந்த வீரராக இருந்திருப்பார்.இங்கிலாந்துக்கு எதிரான டி-20 போட்டியில் கோலி சிறப்பாக விளையாடினார். மேன் ஆஃப் சீரியஸ் விருதும் வாங்கினார். ஆனால் கடந்த ஒன்றரை வருடமாக சதம் எதுவும் அடிக்கவில்லை. ஆனால் ஐசிசி தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் வீரர் பாபர் 2-ஆம் இடத்தில் உள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.