தந்தை இறப்பு... 17 வயது விராட் கோலி ஆடிய ஆட்டம் குறித்து ஆச்சர்யப்பட்ட சக வீரர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியக் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்துவரும் விராட் கோலி, இந்திய அணிக்காகப் பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளார் என்பது ரசிகர்கள் அறிந்ததுதான். ஆனால் 17 வயதில் போட்டிக்கு முன்பு தந்தையின் இறப்பு செய்தி கேட்டுவிட்டு விராட் கோலி களம் இறங்கியது குறித்து அவருடைய நண்பரும் சக வீரருமான இஷாந்த் சர்மா தற்போது பகிர்ந்து கொண்டுள்ள ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறது.
இந்தியக் கிரிக்கெட் அணியில் பல வீரர்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். ஆனால் அண்டர் 17 கிரிக்கெட் விளையாட்டில் இருந்தே விராட் கோலியுடன் ஒன்றாக விளையாடியும் நண்பராகவும் இருந்துவரும் இஷாந்த் சர்மா பகிர்ந்து கொண்டுள்ள கருத்துகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியில் மூத்த வேகப்பந்து வீச்சாளராக இருந்துவந்த இஷாந்த் சர்மா கடந்த 2022 இல் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டிக்குப் பிறகு இந்திய அணியில் இருந்து விலக்கப்பட்டார். இதுவரை 105 டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ள அவர் 311 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு பக்க பலமாக இருந்துள்ளார். மேலும் கபில்தேவ் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போட்டிகளிலும் அதேபோல தோனி தலைமை, விராட் கோலி தலைமை என்று மூத்த வீரர்களுக்கு பக்க பலமாக இருந்து வந்தவர்.
தற்போது 34 வயதில் மீண்டும் கம்பேக் கொடுத்து ஐபிஎல் போட்டிகளுக்காக டெல்லி அணியில் விளையாடி வருகிறார். இந்நிலையில் தன்னுடைய நெருங்கிய நண்பர் விராட் கோலியைப் பற்றி யூடியூப் சேனல் ஒன்றிற்கு நேர்காணல் அளித்துள்ளார்.
அதில் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொண்ட அவர், நாங்கள் 17 அண்டர் கிரிக்கெட்டில் விளையாடி வந்தோம். அப்போது ஒருநாள் கோலி சோகமாக தனித்து இருந்தார். ஏனென்று கேட்டேன். அருகில் இருந்தவர் அவரது தந்தை இறந்த தகவலைக் கூறினார். இதைக் கேட்டவுடன் எப்படி அந்த நேரத்தை எதிர்கொள்வது என்றே எனக்குத் தெரியவில்லை.
ஆனால் தந்தை இறப்பின்போதும் விராட் கோலி களத்தில் இறங்கி டெல்லி அணிக்காக, கர்நாடக அணியை எதிர்த்து அருண் ஜெட்லி மைதானத்தில் விளையாடினார். 80 ரன்களை எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதை அவரால் எப்படி செய்ய முடிந்தது என்றே தெரியவில்லை. நானாக இருந்தால் களத்திற்கே சென்றிருக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
மேலும் ஃபிட்னஸ் விஷயத்தில் விராட் கோலி அதிக அக்கறை கொண்டவர். கிரிக்கெட் வீரர்களும் உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்று கூறிக்கொண்டே இருப்பார். அவருடைய தலைமையில் விளையாடிய வீரர்கள் அனைவரும் ஃபிட்னஸ் விஷயத்தில் அக்கறை காட்டினர் என்றும் தற்போது ஆன்மிக விஷயத்தில் அதிக ஆர்வம் கொண்டிருக்கிறார். இதற்கு அனுஷ்கா சர்மாதான் காரணம் என்றும் விராட் கோலி குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் 17 வயதில் தந்தையின் இறப்பு செய்தி கேட்ட பிறகும் போட்டிக் களத்தில் இறங்கி விளையாடிய விராட் கோலியை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments