வலியில் துடித்த இங்கிலாந்து வீரர்: முதல் நபராக உதவிக்கு ஓடி வந்த விராத்: வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் தொடங்கியது என்பது தெரிந்ததே. இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது என்பதும், இன்றைய ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் எடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் 128 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார் என்பதும் டாம் சிப்லே 87 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் தரப்பில் பும்ரா 2 விக்கெட்டுகளையும் அஸ்வின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார்கள்.
இந்த நிலையில் இந்த போட்டியின் போது இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோரூட் ரன் எடுக்க ஓடிய போது திடீரென காலில் காயம் ஏற்பட்டு துடித்தபடி கீழே விழுந்தார். அப்போது அருகில் பீல்டிங் செய்து கொண்டிருந்த இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லி உடனடியாக ஓடி வந்து அவருக்கு முதல் உதவி செய்தார்.
வலியால் ஜோரூட் துடிதுடித்த போது மருத்துவர்கள் வரும்வரை இருக்காமல் உடனடியாக அவருக்கு முதலுதவி செய்த விராத் கோலியின் மனிதாபிமானத்தை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இது குறித்த வீடியோவை ஐசிசி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது என்பதும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
Virat Kohli with a heart-warming Spirit of Cricket gesture ??pic.twitter.com/aFFV1RoGpb
— ICC (@ICC) February 5, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments