மனைவியின் க்யூட்டான புகைப்படங்களை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விராத் கோஹ்லி ..!

  • IndiaGlitz, [Monday,May 01 2023]

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராட் கோஹ்லி தனது மனைவியின் க்யூட்டான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்து அவருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

லிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா சர்மா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு பாலிவுட் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் அனுஷ்கா சர்மாவின் கணவரும் கிரிக்கெட் வீரருமான விராட் கோலி தனது மனைவியின் க்யூட்டான புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு விராட் கோலி - அனுஷ்கா சர்மா திருமணம் செய்து கொண்டனர் என்பதும் இந்த தம்பதிக்கு வாமிகா என்ற மகள் கடந்த 2021 ஆம் ஆண்டு பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.