கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறார் விராத் கோஹ்லி: அடுத்தது யார்?
- IndiaGlitz, [Thursday,September 16 2021] Sports News
கடந்த சில நாட்களாகவே விராத் கோஹ்லி இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவார் என்றும் அவர் தனது பேட்டிங்கில் முழு கவனத்தை செலுத்துவார் என்றும் கூறப்பட்டது. சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து தொடரில் அவரது பேட்டிங் சுமாராக இருந்ததை அடுத்தே இந்த செய்தி வலம் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த செய்தியை உறுதி செய்வது போல் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக சற்றுமுன் விராட் கோஹ்லி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் ’இந்திய அணிக்காக விளையாடுவதும், இந்திய அணியின் கேப்டனாகவும் பணியாற்றியதும் மிகவும் மகிழ்ச்சியான அனுபவங்கள். இந்திய அணியின் கேப்டனான நான் பொறுப்பு வகிக்க உதவிய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என பிரார்த்தனை மேற்கொண்ட ஒவ்வொரு இந்தியருக்கும் எனது நன்றிகள் என தெரிவித்துள்ளார்.
மேலும் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாகவும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் கேப்டனாக இருப்பதில் கவனம் செலுத்துவேன் என்றும் விராத் கோஹ்லி தெரிவித்துள்ளார். மேலும் நீண்ட ஆலோசனைக்குப் பின்னரே இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் தெரிவித்திருந்தாலும் விராத் கோலியின் ரசிகர்கள் தங்களது அதிர்ச்சியை தெரிவித்து வருகின்றனர்
இருப்பினும் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பை போட்டியில் விராத் கோஹ்லி தான் கேப்டன் பொறுப்பு வகிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
???? ❤️ pic.twitter.com/Ds7okjhj9J
— Virat Kohli (@imVkohli) September 16, 2021