சோகத்திலும் சக வீரர்களிடம் சேட்டை செய்து விளையாடிய கேப்டன்… வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக இந்தியக் கிரிக்கெட் அணி வீரர்கள் தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளனர். இந்த பயணத்தின் போது நடந்த சில சுவாரசியச் சம்பவங்கள்தான் தற்போது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தென்ஆப்பிரிக்க அணியுடன் இணைந்து 4 டி20, 3 ஒருநாள், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக பிசிசிஐ திட்டமிட்டு இருந்தது. ஆனால் ஒமைக்ரான் அச்சம் காரணமாக டி20 போட்டிகள் ரத்துச் செய்யப்பட்டு டிசம்பர் 17 ஆம் தேதி ஒருநாள் போட்டிகள் துவங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பயோபபுள் மற்றும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைக்காக தற்போது மேலும் ஒருவாரம் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு வரும் டிசம்பர் 26 ஆம் தேதி ஒருநாள் போட்டிகள் துவங்கும் என கூறப்பட்டு இருக்கிறது.
இதையடுத்து இந்திய வீரர்கள் கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி மும்பை நகரத்தில் இருந்து தென்ஆப்பிரிக்காவிற்கு சென்றனர். அந்த பயணத்திற்கு இடையே விமானத்தில் இருந்த இஷாந்த் சர்மாவிடம் டெஸ்ட் அணி கேப்டன் கோலி வம்பிழுத்து இருக்கிறார். மேலும் சக வீரர்களை கேலி செய்தும் கிண்டலடித்தும் அவர் விளையாடி இருக்கிறார். மேலும் இஷாந்த் சர்மா சிரிக்க வேண்டாம் என்று கோலியிடம் கேட்டுக்கொண்டும் கூட அவர் சுவாரசியமாக சிரித்து விளையாடிய நிகழ்வு தற்போது சக வீரர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பிசிசிஐயுடன் அதிருப்தி, கேப்டன்ஷி குறித்த மனவருத்ததில் இருந்துவரும் கோலி தற்போது சக வீரர்களிடம் விளையாடிய காட்சி ரசிகர்களிடைய புது உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் போது விராட் கோலி ஒருநாள் மற்றும் டெஸ்ட் என இருபோட்டிகளிலும் கலந்து கொள்ளவுள்ளார். இதற்கிடையே அவருடைய செல்ல மகள் வாமிகாவின் பிறந்த நாள் வருவதையொட்டி விராட் கோலியின் மனைவி நடிகை அனுஷ்கா சர்மா மற்றும் வாமிகா இருவரும் நேற்று தென்ஆப்பிரிக்கா சென்றடைந்ததும் குறிப்பிடத்தக்கது.
From Mumbai to Jo'Burg! ?? ??
— BCCI (@BCCI) December 17, 2021
Capturing #TeamIndia's journey to South Africa ???? ✈️ ???? - By @28anand
Watch the full video ?? ?? #SAvINDhttps://t.co/dJ4eTuyCz5 pic.twitter.com/F0qCR0DvoF
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout