குவாரண்டைனிலும் உடற்பயிற்சி… அசத்தும் இந்திய கேப்டனின் வைரல் வீடியோ!

  • IndiaGlitz, [Saturday,January 30 2021]

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுடன் 4 டெஸ்ட் கிரிக்கெட் தொடர் போட்டி, 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளது. இதில் முதற்கட்டமாக சென்னையில் முதல் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது. இதற்காக சென்னை வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 6 நாட்கள் குவாரண்டைனில் வைக்கப்பட்டு உள்ளனர்.

அதேபோல இந்திய அணி வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 6 நாட்கள் குவாரண்டைனில் வைக்கப்பட்டு உள்ளனர். இந்த 6 நாட்களில் 3 முறை கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் அனைத்து பரிசோதனைகளிலும் கொரோனா இல்லை என்றால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படுவர் என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் தகவல் வெளியிட்டு உள்ளது.

இந்நிலையில் குவாரண்டைனில் உள்ள அனைத்து கிரிக்கெட் வீர்களும் தங்களுடைய அறைகளிலேயே அடைந்து கிடக்கின்றனர். ஆனால் இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் வீராட் கோலி மட்டும் அறைக்குள்ளேயே இருந்து கொண்டு உடற்பயிற்சி செய்து வருகிறார். அதுகுறித்து வீடியோவையும் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு, “குவாரண்டைனிலும் இசை மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் உங்களுக்குத் தேவை. நீங்கள் உண்மையிலேயே விரும்பினால் எங்கு இருந்தாலும் வேலையை தொடங்கலாம்” எனப் பதிவிட்டு இருக்கிறார்.

உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இந்தியக் கேப்டன் விராட் கோலியின் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி இருக்கிறது. கோலி மட்டுமின்றி மயங்க் அகர்வாலும் குவாரண்டைனில் இருந்து கொண்டே பிட்னஸில் ஈடுபடும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கேப்டன் விராட் கோலி மற்றும் மயங்க் அகர்வாலின் செயல் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

More News

கேப்டன் ரஹானேவை திடீரென கொண்டாடும் சூர்யா ரசிகர்கள்: காரணம் இதுதான்!

சமீபத்தில் ஆஸ்திரேலியா நாட்டிற்கு இந்தியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்தபோது முதல் டெஸ்ட்டில் மட்டும் விளையாடி விட்டு கேப்டன் விராத் கோஹ்லி நாடு திரும்பினார்.

மாலையும் கழுத்துமாய் மணக்கோலத்தில் சோம்-ரம்யா: என்ன நடந்தது?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே நெருக்கமாக இருந்ததாக கூறப்பட்ட சோம் மற்றும் ரம்யா திடீரென மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படம் வைரலாகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

ஆப்பிள் தயாரிப்புகளின் புதிய மையமாகிறது தமிழகம்- முதல்வரின் நடவடிக்கையால் சாத்தியம்!

நேற்று தமிழக அமைச்சரவையில் நடைபெற்ற கூட்டத்தொடரில் 52 புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 5 சிறுவர்கள்… பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு புகார்!

உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 32 வயது பெண்மணி ஒருவரை 5 சிறுவர்கள்

என் பலம் என்னன்னு எனக்கே இப்பதான் தெரியுது: பிக்பாஸ் வின்னர் ஆரி!

சமீபத்தில் முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் வின்னர் ஆரி நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் 'என் பலம் என்னன்னு எனக்கே தெரிஞ்ச ஒரு நிகழ்ச்சிதான் பிக்பாஸ் என்று கூறியுள்ளார்