நீங்கள்தான் எங்கள் நிரந்தர கேப்டன்: தோனிக்கு விராத் புகழாரம்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடந்த 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி இந்திய அணியின் அபார வெற்றி மட்டுமின்றி மேலும் ஒரு சிறப்பை பெற்றுள்ளது. அது இந்த போட்டி தல தோனிக்கு 300வது போட்டி என்பது ஆகும்.
முன்னதாக போட்டி நடைபெறுவதற்கு முன்னர் 300வது போட்டியை விளையாடும் தல தோனிக்கு பிளாட்டினம் பேட் ஒன்றை பிசிசிஐ நினைவு பரிசாக வழங்கியது. அப்போது பேசிய கேப்டன் விராத் கோஹ்லி, 'இந்திய அணியில் இப்போது இருக்கிற 90 சதவிகிதம் பேர், உங்கள் தலைமையின் கீழ்தான் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கியிருக்கிறோம். அதனால் எங்களுக்கு எப்போதும் நீங்கள்தான் கேப்டன். இந்த நினைவு பரிசை உங்களுக்கு வழங்குவதில் பெருமையடைகிறோம்` என்று கூறினார்.
மேலும் இந்த போட்டியில் தோனி அவுட் ஆகாமல் 49 ரன்கள் அடித்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிகமுறை அவுட் ஆகாமல் கடைசி வரை களத்தில் நின்ற பேட்ஸ்மேன் என்ற புதிய சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். தோனி இதுவரை 73 போட்டிகளில் அவுட் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவரை அடுத்து இலங்கையின் சமிந்தா வாஸ், தென்னாப்பிரிக்காவின் போலக் ஆகியோர் 72 முறை அவுட் ஆகாமல் இருந்துள்ளனர்.
மேலும் தல தோனி தனது 100வது, 200வது, 300வது ஆகிய போட்டிகளில் இலங்கைக்கு எதிராக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout