பத்திரிக்கையாளர் சந்திப்பில் கோபப்பட்ட கோலி.. என்ன கேள்வி கேட்கப்பட்டது தெரியுமா..?!
Send us your feedback to audioarticles@vaarta.com
நியூசிலாந்து அணியிடம், இந்தியாவின் டெஸ்ட் தொடர் தோல்விக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் கோலி. அப்போது, களத்தில் விராட் கோலி நடந்துகொள்வது குறித்து கேள்வி எழுப்பிய ஒரு நிருபர் மீது அவர் கோபமடைந்தார். கிறிஸ்ட்சர்ச்சில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றதால், 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.
இந்தியாவின் இழப்புக்குப் பிறகு, விராட் கோலி பத்திரிகையாளர் சந்திப்பில் தனது அணி முற்றிலும் மோசமாக செயல்பட்டதை ஒப்புக் கொண்டார். ஆனால் ஒரு பத்திரிகையாளரிடம் தனது பொறுமையை இழந்தார். களத்தில், அவரின் நடத்தை ஒரு இந்திய கேப்டனுக்கு சரியானதா என்று அந்த நிருபர் கேட்டார். முதல் இன்னிங்ஸின் போது விராட் கோலி, கேன் வில்லியம்சன் அவுட் ஆகும்போது ஆக்ரோஷமாக அதை கொண்டாடினார் மற்றும் ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்து ஆதரவாளர்கள் நோக்கி கத்தியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
“கேன் வில்லியம்சன் ஆவுட் ஆன போது உங்களுடைய நடத்தை குறித்து ரியாக்ஷன் என்ன மற்றும் நியூசிலாந்து ரசிகர்களை நோக்கி நீங்கள் அப்படி நடந்து கொண்டது ஏன் . ஒரு இந்திய கேப்டனாக, நீங்கள் களத்தில் ஒரு சிறந்த முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?” என்று நிருபர் கேட்டார்.
“நீங்கள் என்ன நினைக்கிறீகள்?” என்று நிருபரை கோபமாக கேட்டார் கோலி. நீங்கள் அங்கு என்ன நடந்தது என்பதை தெளிவாக தெரிந்து கொண்டு, சிறந்த கேள்வியுடன் வாருங்கள். பாதி விவரங்கள் தெரிந்துகொண்டு, நீங்கள் பாதி கேள்வியுடன் இங்கே வர முடியாது. மேலும். நீங்கள் இங்கே சர்ச்சை ஏற்படுத்த நினைத்தால், அதற்கான இடம் இது கிடையாது. நான் போட்டி நடுவரிடம் பேசினேன், என்ன நடந்ததோ அதிகுறித்து அவருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை,” என்று கோலி கூறினார்.
இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், நியூசிலாந்துக்கு எதிரான, இந்தியா 165, 191, 242 மற்றும் 124 ரன்களை நிர்வகித்தது. இதில், கோலி தனது நான்கு இன்னிங்சில் 2, 19, 3 மற்றும் 14 ஆகிய ரன்களுடன் நிறைவு செய்தார். நியூசிலாந்து அணி கடைசி 13 உள்நாட்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடையாமல் உள்ளது. முன்பு, 39 போட்டிகளில் விளையாடி, 20 வென்று, 13 போட்டிகள் ட்ரா செய்து மற்றும் ஐந்து போட்டிகளை இழந்துள்ளது.
இந்தியா இந்த நாளை, ஆறு விக்கெட் இழப்புக்கு 90 ரன்களுடன் தொடங்கி, 124 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் நியூசிலாந்து அணி, 36 ஓவர்களில் மூன்று விக்கெட் இழந்து 132 ரன்கள் எட்டு போட்டியை வென்றது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Sai Surya
Contact at support@indiaglitz.com
Comments