பத்திரிக்கையாளர் சந்திப்பில் கோபப்பட்ட கோலி.. என்ன கேள்வி கேட்கப்பட்டது தெரியுமா..?!

நியூசிலாந்து அணியிடம், இந்தியாவின் டெஸ்ட் தொடர் தோல்விக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் கோலி. அப்போது, களத்தில் விராட் கோலி நடந்துகொள்வது குறித்து கேள்வி எழுப்பிய ஒரு நிருபர் மீது அவர் கோபமடைந்தார். கிறிஸ்ட்சர்ச்சில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றதால், 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.

இந்தியாவின் இழப்புக்குப் பிறகு, விராட் கோலி பத்திரிகையாளர் சந்திப்பில் தனது அணி முற்றிலும் மோசமாக செயல்பட்டதை ஒப்புக் கொண்டார். ஆனால் ஒரு பத்திரிகையாளரிடம் தனது பொறுமையை இழந்தார். களத்தில், அவரின் நடத்தை ஒரு இந்திய கேப்டனுக்கு சரியானதா என்று அந்த நிருபர் கேட்டார். முதல் இன்னிங்ஸின் போது விராட் கோலி, கேன் வில்லியம்சன் அவுட் ஆகும்போது ஆக்ரோஷமாக அதை கொண்டாடினார் மற்றும் ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்து ஆதரவாளர்கள் நோக்கி கத்தியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

“கேன் வில்லியம்சன் ஆவுட் ஆன போது உங்களுடைய நடத்தை குறித்து ரியாக்‌ஷன் என்ன மற்றும் நியூசிலாந்து ரசிகர்களை நோக்கி நீங்கள் அப்படி நடந்து கொண்டது ஏன் . ஒரு இந்திய கேப்டனாக, நீங்கள் களத்தில் ஒரு சிறந்த முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?” என்று நிருபர் கேட்டார்.

“நீங்கள் என்ன நினைக்கிறீகள்?” என்று நிருபரை கோபமாக கேட்டார் கோலி. நீங்கள் அங்கு என்ன நடந்தது என்பதை தெளிவாக தெரிந்து கொண்டு, சிறந்த கேள்வியுடன் வாருங்கள். பாதி விவரங்கள் தெரிந்துகொண்டு, நீங்கள் பாதி கேள்வியுடன் இங்கே வர முடியாது. மேலும். நீங்கள் இங்கே சர்ச்சை ஏற்படுத்த நினைத்தால், அதற்கான இடம் இது கிடையாது. நான் போட்டி நடுவரிடம் பேசினேன், என்ன நடந்ததோ அதிகுறித்து அவருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை,” என்று கோலி கூறினார்.

இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், நியூசிலாந்துக்கு எதிரான, இந்தியா 165, 191, 242 மற்றும் 124 ரன்களை நிர்வகித்தது. இதில், கோலி தனது நான்கு இன்னிங்சில் 2, 19, 3 மற்றும் 14 ஆகிய ரன்களுடன் நிறைவு செய்தார். நியூசிலாந்து அணி கடைசி 13 உள்நாட்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடையாமல் உள்ளது. முன்பு, 39 போட்டிகளில் விளையாடி, 20 வென்று, 13 போட்டிகள் ட்ரா செய்து மற்றும் ஐந்து போட்டிகளை இழந்துள்ளது.

இந்தியா இந்த நாளை, ஆறு விக்கெட் இழப்புக்கு 90 ரன்களுடன் தொடங்கி, 124 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் நியூசிலாந்து அணி, 36 ஓவர்களில் மூன்று விக்கெட் இழந்து 132 ரன்கள் எட்டு போட்டியை வென்றது.

More News

பிரபல நடிகரின் துப்பறியும் படத்திற்கு ஆர்யா வாழ்த்து!

கன்னட திரையுலகில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றி திரைப்படம் 'பெல்பாட்டம்' ஜெயதீர்த்தா என்பவர் இயக்கிய இந்தப் படத்தில் ரிஷப் ஷெட்டி மட்டும் ஹரிப்பிரியா நடித்திருந்தனர்.

ஆபாச படம் எடுப்பதாக கூறிய இயக்குனர் ஸ்டீபன்ஸ்பீல்பெர்க் மகள் திடீர் கைது: 

'ஜுராசிக் பார்க்' உள்பட உலக புகழ்பெற்ற பல திரைப்படங்களை இயக்கிய ஸ்டீபன் ஸ்பீல்பர்க் மகன் மைக்கேலா ஆபாச படங்களை தயாரித்து நடிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்

மூன்று மதங்களுக்கும் ஒரே ஆலயம்: பிரபல நடிகரின் புதிய முயற்சி

மதச்சார்பின்மை குறித்து பொது மேடையில் அரசியல்வாதிகள் பேசினாலும் உண்மையில் மத கலவரத்தை தூண்டிவிட்டு அதில் அரசியல் லாபம் பார்க்கும் அரசியல்வாதிகள்

ரஜினியும் கமலும் சேர்ந்தால் ஒரே ஒரு நல்லது நடக்கும்: அமைச்சர் ஜெயகுமார்

வரும் 2021 சட்டமன்ற தேர்தலின்போது ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் இணைந்து தேர்தலை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னர் கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படம்

"பிரதமருக்கு மட்டும் குடியுரிமைச் சான்றிதழ் தேவையில்லை"..! RTI கேள்விக்கு பிரதமர் அலுவலகம் பதில்.

சுபங்கர் சர்கார் என்பவர் கடந்த ஜனவரி 17-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் குடியுரிமைச் சான்றிதழைக் கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.