இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன் அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய கிரிக்கெட் அணியின் 'தல' என்று கூறப்படும் தோனி சமீபத்தில் ஒருநாள் போட்டிகள் மற்றும் டி-20 போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்ததும் அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் தோனி எடுத்த முடிவு சரியானதே என்று கவாஸ்கர் உள்பட சீனியர் கிரிக்கெட் வீரர்கள் தோனிக்கு புகழாரம் சூட்டினர்.
இந்நிலையில் இந்திய அணியின் புதிய கேப்டனாக விராத் கோஹ்லி இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் அபாரமாக கேப்டன்ஷிப் செய்த கோஹ்லி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளுக்கு விராத்கோஹ்லியே கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் தோனி, விக்கெட் கீப்பராக விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்கள் பட்டியல்:
விராத் கோஹ்லி (கேப்டன்), தோனி (விக்கெட் கீப்பர்), யுவராஜ்சிங், ராகுல், ஷிகர் தவான், மணிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், அஜின்கியா ரஹானே, ஹர்திக் பாண்டியா, அஸ்வின், ஜடேஜா, மைத் மிஷ்ரா, புக்ரா, புவனேஷ்வர் குமார் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகள் ஜனவரி 15ஆம் முதல் தொடங்குகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com