ஒருநாள் போட்டியில் இருந்து விலகும் விராட் கோலி…. அதிருப்தி காரணமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இருந்து விராட் கோலி விலகவுள்ளதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா விளையாடமாட்டார் என்ற தகவல் நேற்று வெளியான நிலையில் தற்போது ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதன் பின்னணியில் அதிருப்தி இருக்குமோ என்ற சந்தேகத்தையும் ரசிகர்கள் சிலர் கிளப்பி வருகின்றனர்.
டி20 உலகக்கோப்பை போட்டியைத் தொடர்ந்து இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக விராட் கோலியின் கேப்டன்சி மீது பலரும் விமர்சனங்களை வெளியிட்டு வந்த நிலையில் டி20 இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை அவர் ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து ஒருநாள் இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன்ஷி பதவியும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு அந்தப் பதவி தற்போது ரோஹித் சர்மாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் விராட் கோலி அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் கூறப்படுகின்றன. இந்நிலையில் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3 டெஸ்ட் தொடரில் கேப்டனாக கலந்துகொள்ளும் கோலி அடுத்துவரும் 3 ஒருநாள் போட்டியில் இருந்து விலகுவதாக தகவல் கூறப்படுகிறது. இதுகுறித்து இங்கிலாந்து, உலகக்கோப்பை, நியூசிலாந்து என கோலி தொடர்ந்து சர்வதேசப் போட்டிகளில் விளையாடி வருவதால் தனக்கு ஓய்வு வேண்டும் என்று அவர் பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கோலி முடிவு குறித்து பிசிசிஐ இன்னும் முடிவெடுக்காத நிலையில் விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் விளையாட மாட்டார் என்பதே ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. முன்னதாக கைவிரல் காயம் காரணமாக ரோஹித் சர்மா தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று தகவல் வெளியானது. தற்பாது விராட் கோலி ஒருநாள் போட்டியில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. அடுத்தடுத்து வந்த இந்தத் தகவல்கள் கிரிக்கெட் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தி வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com