கேப்டன்சியை இழந்த கோலி… தென்ஆப்பிரிக்க பயணத்தை ஒட்டி திடீர் மாற்றம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒமைக்ரான் வகை வைரஸ் பாதிப்பு காரணமாக தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் ரத்துச் செய்யப்படும் என்பது போன்ற பரபரப்பு தகவல்கள் பரவிவந்த நிலையில் தென்ஆப்ரிக்க கிரிக்கெட் அகாடமி சில வேண்டுகோளை முன்வைத்தது. அந்த அடிப்படையில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு தற்போது தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் கிரிக்கெட் தொடர் போட்டியில் இந்திய அணி வீரர்கள் விளையாட உள்ளனர்.
இதையடுத்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் வரும் 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடர் வரை ஒருநாள் அணிக்கு கேப்டனாகப் பதவி வகிப்பார் என்று பிசிசிஐ தெரிவித்து உள்ளது. இந்நிலையில் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய கோலி தானாகவே ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் அவர் தானாகவே விலகிவிடுவார் என்று பிசிசிஐ எதிர்ப்பார்த்ததாகவும் அதற்காக 48 மணிநேரம் காத்திருந்து பின்னர் அவரை பதவிநீக்கம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் அணியிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்ப்டடு உள்ளன. அந்த வகையில் ஹனுமா விஹாரி, இஷாந்த் சர்மா ஆகியோர் மீண்டும் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டு உள்ளனர். மேலும் காயம் காரணமாக ரவிந்திர ஜடேஜா, அக்சர் படேல், சுப்மல் கில் ஆகியோர் அணியில் இருந்து விலக்கப்பட்டு உள்ளனர்.
தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் அணி- விராட் கோலி ( கேப்டன்), ரோகித் சர்மா ( துணை கேப்டன்), கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், விருத்திமான் சாஹா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர், முகம்மது சிராஜ் ஆகியோர் விளையாட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
The All-India Senior Selection Committee also decided to name Mr Rohit Sharma as the Captain of the ODI & T20I teams going forward.#TeamIndia | @ImRo45 pic.twitter.com/hcg92sPtCa
— BCCI (@BCCI) December 8, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout