கோலி 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து திடீர் விலகல்… என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
தசைப்பிடிப்பு காரணமாக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து திடீரென விலகியுள்ளார். இதையடுத்து அணிக்கு கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியா, தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி செஞ்சூரியனில் கடந்த 26 ஆம் தேதி துவங்கி நடைபெற்று முடிந்தது. இதில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று 1-0 என்று முன்னிலை வகித்துவருகிறது. இந்நிலையில் 2ஆவது டெஸ்ட் தொடர் இன்று ஜோகன்ஸ்பர்க் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டிக்காக டாஸ் போடப்பட்டபோது டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு பதிலாக கே.எல்.ராகுல் கலந்துகொண்டார். மேலும் கோலிக்கு முதுகில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் இதனால் அவர் 2 ஆவது டெஸ்ட் போட்டியில் கலந்துகொள்ள மாட்டார் என்றும் ஒருவேளை தசைப்பிடிப்பு குணமானால் 3 ஆவது டெஸ்ட் போட்டியில் அவர் கலந்து கொள்வார் என்றும் விளக்கம் அளித்திருந்தார்.
இந்திய அணி இதுவரை ஜோக்கன்ஸ்பர்க்கில் நடைபெற்ற எந்தப் போட்டியிலும் தோற்றதே இல்லை. இன்று துவங்கியிருக்கும் இந்தப் போட்டியில் இந்தியா வெற்றிப்பெற்றால் தொடரை வெல்லமுடியும். இப்படியிருக்கும்போது அனுபவம் வாய்ந்த கேப்டன் கோலி விலகியிருக்கிறார். இதனால் ரசிகர்கள் கடும் பதற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து டெஸ்ட் கேப்டனாக கே.எல்.ராகுல் அணியை வழிநடத்தி வருகிறார். அவர் இதுவரை டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக பதவிவகித்தது இல்லை. மேலும் கோலிக்கு பதிலாக அணியில் அனுமான் விஹாரி இணைத்து கொள்ளப்பட்டு இருக்கிறார். இவர்களைத் தவிர அணியில் மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, ரிஷப் பண்ட், ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்துல் தாகூர், பும்ரா, முகமது ஷமி, சிராஜ் என 4 வேகப்பந்து, 1 சுழற்பந்து வீரர்களுடன் இந்திய அணி டாஸ் வென்று விளையாடி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout