நடுவருடன் வாக்குவாதம்- புது நெருக்கடியில் கேப்டன் வீராட் கோலி?
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் என்ற சாதனையை நேற்று சமன் செய்தார். அதேபோல அவருடைய கேப்டன்ஷிப்பில் இந்திய அணி 1,000 ஆவது விக்கெட்டை நேற்று வீழ்த்தியது. இதனால் கேப்டன்ஷியில் புது சாதனை படைத்த கேப்டன் விராட் கோலிக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் விதிமுறைகளை மீறினார் என்றும் இதனால் அவரை ஒரு போட்டியில் தடை செய்யுமாறும் சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர். ஐசிசியின் 2.8 விதியின்படி ஒரு அணியின் கேப்டன் விதிகளை மீறுவது, நடுவர் கூறிய முடிவு குறித்து நீண்ட விவாதத்தில் ஈடுபடுவது அல்லது வாதிடுவது போன்றவை குற்றமாகக் கருதப்படும். இப்படி செய்யும் கேப்டனுக்கு 1-4 டீ மெரிட் புள்ளிகளை வழங்குவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
இந்த விதிமுறைகளின்படி ஒரு கேப்டன் 4 டீ மெரிட் புள்ளிகளைப் பெற்று விட்டால் அவரை ஒரு போட்டியில் விளையாட முடியாதபடி தடை விதிக்கவும் ஐசிசிக்கு அதிகாரம் உள்ளது. இதன்படி ஏற்கனவே 2 டீ மெரிட் புள்ளிகளை பெற்றுவிட்ட விராட் கோலி தற்போது மேலும் ஒரு புள்ளியை பெற வாய்ப்பு இருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகின.
காரணம் இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3 ஆவது நாளில் கேப்டன் விராட் கோலி நடுவர் நிதின் மேனனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வாக்குவாதத்தால் விராட் கோலிக்கு புது நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. 3 ஆவது நாள் போட்டியில் இந்திய வீரர் அக்சர் படேல் வீசிய பந்துக்கு இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் செய்தார். அதில் அக்சர் விசிய எல்.பி.டபில்யூ பந்தை நடுவர் நிதின் மேனன் ஒப்புக் கொள்ளவில்லை.
மேலும் டிஆர்எஸ் எடுக்கப்பட்டபோது பந்து லேசாக ஸ்டம்பை உரசி சென்றது எனக் கூறப்பட்டு அம்பயர்ஸ் கால் கொடுத்து விக்கெட் இல்லை எனக் கூறிவிட்டனர். இதனால் கோபம் அடைந்த விராட் கோலி நடுவர் நிதினுடன் நீண்ட விவாதத்தில் ஈடுபட்டார். இந்த விவாதத்தை ஒட்டி கேப்டன் விராட் விதிமுறைகளை மீறினார் என்றம் அவரை ஒரு போட்டியில் இருந்து தடை செய்யுமாறு பல இங்கிலாந்து வீரர்கள் தற்போது கோரிக்கை வைக்கத் தொடங்கி உள்ளனர்.
மேலும் கேப்டன் விராட் கோலியின் இச்செயலுக்கு இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நசீர் உசேன் கண்டனமும் தெரிவித்து உள்ளார். இந்நிலையில் ஏற்கனவே 2 டீ மெரிட் புள்ளிகளைப் பெற்றுள்ள விராட் கோலிக்கு தற்போது மேலும் டீ மெரிட் புள்ளிகள் கொடுக்கப்படுமா? ஒருவேளை டீ மெரிட் புள்ளி 4 என்ற எண்ணிக்கையை பெற்றுவிட்டால் ஒரு போட்டியில் விளையாட முடியாதபடி தடை விதிக்கப்படுமா என அடுத்தடுத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதனால் இந்திய ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout