கோலி கேப்டன்ஷியின் ஆச்சர்யமூட்டும் ரெக்கார்டு… வைரலாகும் தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவின் 3 வடிவ கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்துவந்த விராட் கோலி அவர்கள், டி20 கிரிக்கெட் போட்டியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக தனது இன்ஸ்டாவில் தகவல் வெளியிட்டு உள்ளார். டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று முடிந்தவுடன் இந்தப் பதவியில் இருந்து விலகுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
கேப்டன் கோலியின் இந்த அறிவிப்பை தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியை வெளியிட்டு வருகின்றனர். காரணம் தல தோனியை விட அதிக வெற்றிப் புள்ளிகளை வைத்திருக்கும் கோலி ஏன் டி20 கிரிக்கெட் கேப்டன்ஷியில் இருந்து விலக வேண்டும்? என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து ரசிகர்கள், கோலி இந்திய அணியின் 45 டி20 போட்டிகளுக்குத் தலைமை தாங்கியுள்ளார். இதில் 29 வெற்றிகள் 14 தோல்விகள் கிடைத்து இருக்கின்றன. இதனால் கோலியின் வெற்றி சதவீதம் 64.44% ஆக உள்ளது.
மேலும் டி20 போட்டிகளில் சிறந்த கேப்டன் வரிசையில் உலகிலேயே கோலி இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறார். முதல் இடத்தில் ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் அஷ்ரப் ஆஃகான் விளங்கிவருகிறார். இவர் 52 டி20 போட்டிகளில் 42 வெற்றிகளைப் பெற்றுதந்து 80.77% வெற்றி சதவீதத்தைக் கொண்டிருக்கிறார். இதற்கு அடுத்த நிலையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி இருந்து வருகிறார்.
இந்நிலையில் கேப்டன் கோலி டி20 போட்டியின் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டுமா? என கொதித்த ரசிகர்கள் “கேப்டன்ஷி“, “கிங் கோலி” போன்ற ஹேஷ்டேக்குகளை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். கோலிக்கு அடுத்த நிலையில் தென்ஆப்பிரிக்க கேப்டன் டூபிளசிஸ் 40 டி20 போட்டிகளுக்கு தலைமை வகித்து அதில் 25 போட்டிகளில் வெற்றிப்பெற்றுள்ளார். இதனால் அவருடைய வெற்றி சதவீதம் 62.70% ஆக உள்ளது.
நான்காவது இடத்தில் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் 60.94% வெற்றி புள்ளிகளுடனும் அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் டேரன் ஷமி 59.57% புள்ளிகளுடனும் அடுத்தடுத்த இடங்களில் காணப்படுகின்றனர். இந்தப் பட்டியலில் இந்தியாவின் தல தோனி 58.33% வெற்றிச் சதவீதத்தைப் பெற்று 6 ஆவது இடத்தில் இருக்கிறார். இதனால் தோனியின் ரெக்கார்ட்டை வீழ்த்திய கேப்டன் கோலி கேப்டன்ஷி பதவியில் இருந்து விலகுவது குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments