துவண்டுபோன வீரருக்கு தோள் கொடுத்த விராட் கோலி… கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக 4 தோல்விகளுக்குப் பிறகு நேற்றைய போட்டியில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வெற்றிப்பெற்றுள்ளது. இதைக் கொண்டாடி தீர்க்கும் சிஎஸ்கே ரசிகர்கள் விராட் கோலி செய்த மற்றொரு காரியத்தையும் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.
சிஎஸ்கே அணியின் முன்னணி நட்சத்திரமாக விளங்கிவரும் ருதுராஜ் கெயிக்வாட் கடந்த ஐபிஎல் போட்டிகளின்போது அதிக ரன்களை அடித்து ஆரஞ்சு தொப்பியையும் வாங்கியிருந்தார். ஆனால் தற்போதைய ஐபிஎல் போட்டிகளில் அவரால் பெரிதாக விளையாட முடியவில்லை. காரணம் காயம், கொரோனா பாதிப்பு என அடுத்தடுத்த நெருக்கடிக்குள் சிக்கித் தவித்துவரும் அவர் 0,1,1,16,17 என்ற வரிசையில் ரன்களை அடித்து ஃபார்ம் அவுட் என்ற நிலைமையிலேயே இருந்துவருகிறார்.
இதனால் அவருடைய ரசிகர்களே அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். கூடவே அடுத்த போட்டியில் அதிக ரன்களை எடுக்காவிட்டால் அணியில் இருந்து நீக்கப்போவதாக சிஎஸ்கே அணியும் அவரை எச்சரித்து இருந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் ருதுராஜ் மீண்டும் 17 ரன்களையே அடித்திருந்தார். அப்போது களத்தில் இருந்த அவரை விராட் கோலி கவனித்துவிட்டு போட்டி முடிந்தவுடன் பெவிலியனுக்குச் செல்லும் வழியில் விராட் கோலி ருதுராஜ்ஜின் தோள் மீது கைகளை வைத்துக்கொண்டு ஆறுதலாகப் பேச்சுக்கொடுத்தார். இந்தக் காட்சிகள் தற்போது சிஎஸ்கே ரசிகர்களுக்குக் கடும் நெகிழ்ச்சி அளித்துவருகிறது.
காரணம் ஐபிஎல் போட்டிகளைப் பொறுத்தவரை அடுத்த அணியை வீழ்த்தினால் மட்டுமே வெற்றி என்ற நிலையில் எதிரணி வீரரான ருதுராஜ்க்கு பெங்களூரு ராயல் சேலஞ்ச் அணியின் வீரர் கோலி கொடுத்த ஆறுதல் வார்த்தைகள் தற்போது பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.
Virat Kohli talking with Ruturaj after the match - always for the youngsters. #IPL2022 pic.twitter.com/aalq9gNbtD
— Johns. (@CricCrazyJohns) April 12, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments