மீண்டும் கேப்டன் ஆகிறாரா கோலி? சப்ஸ்பென்ஸை உடைத்த வைரல் வீடியோ!

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாக இருந்துவந்த விராட் கோலி கடந்த ஆண்டு ஐபிஎல் சீசன் போட்டிகளின்போது தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு வெளியிட்டார். அதைத் தொடர்ந்து ஆர்சிபி அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து காணப்பட்டது. அதற்கான விடையைத் தற்போது கோலியே தெரிவிக்கும் வகையில் ஒரு வீடியோ வெளியாகி இருக்கிறது.

இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்துவந்த விராட் கோலி தலைமையில் ஐசிசி மற்றும் உலகக்கோப்பை தொடர்களை இந்திய அணி இதுவரை வெல்லவில்லை என்று விமர்சிக்கப்பட்டது. இதையடுத்து இந்தியக் கிரிக்கெட் அணியின் அனைத்துவிதப் பதவிகளில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவிப்பு வெளியிட்டார். அதேபோல 9 வருடங்களாக ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்துவரும் கோலி ஒருமுறை கூட பெங்களூரு அணிக்கு கோப்பையைப் பெற்றுத்தரவில்லை என்று விமர்சனம் எழுந்தது. இந்த விமர்சனத்தைத் தொடர்ந்து ஆர்சிபி அணியின் கேப்டன் பதவியையும் அவர் ராஜினாமா செய்தார்.

இதையடுத்து மீண்டும் பழைய பாஃர்மிற்கு வரவேண்டும் என்று கோலி முயற்சித்து வருகிறார். தற்போது ஐபிஎல் 15 ஆவது சீசன் போட்டிகள் வரும் மார்ச் 12 ஆம் தேதி துவங்கவுள்ளது. 10 அணிகளைக் கொண்ட இந்தத் தொடரில் 9 அணிகளின் கேப்டன்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். ஆனால் பெங்களூரு அணிக்கான கேப்டன் மட்டும் இன்னும் தெரியாமல் இருக்கிறது. இதையடுத்து ஆர்சிபி அணி நிர்வாகம் தனது கேப்டன் யார் என்பதை மறைமுகமாகத் தெரிவிக்கும் வகையில் சில கட்அவுட்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. அதில் விராட் கோலியின் உருவப்படங்கள் இருந்ததைப் பார்த்து ரசிகர்கள் கடும் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தினர்.

மேலும் கோலியின் பதவி விலகலுக்கான கடிதத்தை ஆர்சிபி அணி நிர்வாகம் இன்னும் அதிகாரப் பூர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அடுத்த கேப்டன் யார் என்ற விவரம் வரும் 12 ஆம் தேதி வெளியிடப்படும் என்பதுபோன்ற தகவல்கள் வெளியாகின. இதனால் ஆர்சிபி கேப்டனாக மீண்டும் கோலியே தலைமையேற்று வழிநடத்துவார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் விராட் கோலி ஆர்சிபி அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற சன்பன்ஸை உடைக்கும் வகையில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் புதிய அணியுடன் உற்சாகமாக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியை எதிர்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். இதுகுறித்த புது அப்டேட்கள் வரும் 12 ஆம் தேதி இரவு 8 மணிக்கு வெளியாகும் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே அந்த வீடியோவின் ஒலி துண்டிக்கப்படுகிறது.

இதையடுத்து ஆர்சிபி அணியின் கேப்டனாக கோலியே மீண்டும் பதவி வகிக்க இருப்பதைத்தான் அந்த வீடியோவில் சொல்லியிருக்கிறார் என்றும் இதுதொடர்பான புது அப்டேட்கள் நாளை தெரியும் என்று ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.