120% முடிந்ததை செய்துவிட்டேன்… மைதானத்திலேயே கண்ணீர் சிந்திய விராட் கோலி!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஐபிஎல் 2021 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடரின் எலிமினேட்டர் ரவுண்ட் நேற்று பெங்களூரு அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் இடையில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் கடைசிவரை போராடிய பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியிடம் தோல்வியை தழுவியிருக்கிறது. இதனால் ஆர்சிபியின் ஐபிஎல் கனவு இந்த முறையும் பறிபோய் இருக்கிறது.
அதிலும் புள்ளிப்பட்டியலில் 3 ஆவது இடத்தை பிடித்திருந்த ஆர்சிபி கடைசிவரை போராடி தோல்வியை தழுவி இருக்கிறது. மேலும் கேப்டன் கோலி அடுத்த ஐபிஎல் தொடரில் இருந்து ஆர்சிபியின் கேப்டன் பதவியைவிட்டு விலகுவதாக அறிவித்து இருந்தார். இதனால் பதவி விலகலுக்கு முன்பு தன்மீதான விமர்சனத்துக்கு தக்கப்பதிலடி கொடுப்பார். எனவே எப்படியாவது இந்த ஐபிஎல்- போட்டியில் கப்பை வென்றுவிடுவார் என்று ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்தனர். ஆனால் இந்த முறையும் ஆர்சிபி வெற்றி வாய்ப்பை நழுவவிட்டிருக்கிறது.
நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆர்சிபி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் கொல்கத்தா பவுலர் சுனில் நரேனின் பந்துவீச்சு தாக்குப்பிடிக்க முடியாமல் ஆர்சிபி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்களை மட்டுமே குவித்தது.
பின்பு களமிறங்கிய கொல்கத்தா சீரான வேகத்தில் ரன் ரேட்டிங்கை உயர்த்தியது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மிடில் ஓவரில் பவுலர் சுனில் நரேன் 3 சிக்ஸர்களை அடித்து ஆட்டத்தை விறுவிறுப்பாக்கினார். இதனால் கொல்கத்தா 19.4 ஓவர் முடிவில் 139 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் கடைசிவரை போராடி ஆர்சிபி வெற்றிவாய்ப்பை நழுவவிட்டிருக்கிறது. இதனால் கடும் ஏமாற்றம் அடைந்த ஆர்சிபி கேப்டன் கோலி நேற்று மைதானத்திலேயே கண்ணீர் விட்டு உருகிய காட்சிகள் தற்போது சோஷியல் மிடியாவில் வைரலாகி வருகின்றன. மேலும் டிவில்லியர்ஸ்ஸும் கண்ணீர் சிந்திய காட்சிகளை பார்க்க முடிந்தது.
இதையடுத்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய கேப்டன் விராட் கோலி தனது கடைசி கேப்டன்சி போட்டியைக் குறித்து கருத்துப் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், “ஆட்டத்தை ஒட்டுமொத்தமாக ஸ்பின்னர்கள் ஆக்கிரமித்தார்கள். மிடில் ஓவர்களில் எங்களின் விக்கெட்டுகளை தொடர்ச்சியாக எடுத்து அதிர்ச்சி கொடுத்தனர். இதனை மோசமான பேட்டிங் என்று கூறாமல் சிறப்பான பவுலிங் என்று கூறுவதுதான் சரியாக இருக்கும்.
ஆர்சிபியின் பவுலிங்கும் சிறப்பாக இருந்தது. நாங்கள் முடிந்தவரை போராடினோம். ஆனால் மிடிலில் ஒரு ஓவரில் அதிக ரன் வந்துவிட்டது. இதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்தாண்டு ஆர்சிபி கேப்டனாக நான் ஒரு விஷயத்தை முன்னெடுத்தேன். நிறைய இளம் வீரர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுத்தேன். நான் எனது முழு முயற்சியையும் கொடுத்துவிட்டேன்.
120% என்னால் முடிந்ததை செய்துவிட்டேன். அடுத்த 3 ஆண்டுகளை எதிர்நோக்கியுள்ளேன். நான் நிச்சயம் ஆர்சிபி அணிக்காக விளையாடுவேன். ஐபிஎல் தொடரில் எனது கடைசி போட்டி வரை ஆர்சிபி அணிக்காக உழைப்பேன்“ எனத் தெரிவித்துள்ளார்.
"I have tried my best to create a culture where youngsters could come in & play with freedom & belief.I have given 120% to RCB every time, which is something I will now do as a player.”
— Royal Challengers Bangalore (@RCBTweets) October 11, 2021
You have been an inspiration, role model and the torchbearer of RCB. #ThankYouCaptainKohli pic.twitter.com/tlC0uMH2iW
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com