சச்சின் சாதனையை முறியடித்தார் விராத் கோஹ்லி

  • IndiaGlitz, [Wednesday,October 24 2018]

கிரிக்கெட் உலகின் பிதாமகன் என்று போற்றப்படும் சச்சின் தெண்டுல்கரின் சாதனையை இன்று இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லி முறியடித்து புதிய உலக சாதனை ஏற்படுத்தியுள்ளார்.

இன்று மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடிய கேப்டன் விராத் கோஹ்லி, 10000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். விராத் 10 ஆண்டுகளில் 205 இன்னிங்ஸ்களில் இந்த ரன்களை எடுத்து புதிய சாதனை ஏற்படுத்தியுள்ளார். இதற்கு முன்னர் சச்சின் தெண்டுல்கர் 259 இன்னிங்ஸ்களில் 10000 ரன்கள் எடுத்ததே உலக சாதனையாக இருந்தது. அதிவேக பத்தாயிரம் ரன்கள் எடுத்து புதிய உலக சாதனை ஏற்படுத்திய விராத் கோஹ்லிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

மேலும் 10 ஆயிரம் ரன்களை சவுரவ் கங்குலி 263 இன்னிங்ஸ்களிலும், ரிக்கி பாண்டிங் 266 இன்னிங்ஸ்களிலும், கல்லீஸ் 272 இன்னிங்ஸ்களிலும், தோனி 273 இன்னிங்ஸ்களிலும் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.