விராட் கோலியை மணக்க நினைத்த வீராங்கனை…. ஒருபாலின காதலியோடு நிச்சயதார்த்தம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற பிரபல வீராங்கனையான டேனியல் வியாட் தனது ஒருபாலின காதலியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த இந்திய ரசிகர்கள் விராட் கோலிக்கு அவர் காதல் தூது அனுப்பிய நிகழ்வுகளை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர்.
கடந்த 2010 முதல் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பெற்று விளையாடி வருபவர் டேனில் வியாட். இதுவரை 102 ஒருநாள் போட்டிகளில் 1776 ரன்களையும் 143 டி20 போட்டிகளில் 2369 ரன்களையும் குவித்துள்ளார். இவர் இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் தீவிர ரசிகையாக இருந்துள்ளார். மேலும் கடந்த கடந்த 2014 இல் “கோலி என்னைத் திருமணம் செய்துகொள்” என்று தனது சமூகவலைத் தளப்பக்கத்திலும் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் டேனியல் வியாட் தற்போது 2023 மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டிகளுக்காக தென்ஆப்பிரிக்கா கேப்டவுனில் தங்கியுள்ளார். மேலும் அரையிறுதி வரையிலும் இங்கிலாந்து அணியில் இடம்பெற்று விளையாடி வந்தார். இந்நிலையில் லண்டன் கால்பந்து அணியில் இடம்பெற்று விளையாடி வரும் வீராங்கனையான ஜார்ஜியா ஹாட்ஜுடன் என்பவருடன் இருக்கும் புகைப்படத்தை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் டேனில் வியாட் வெளியிட்டுள்ள தனது பதிவில் “என்றுமே என்னுடையது” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்கள் டேனியல் வியாட் மற்றும் ஜார்ஜியா ஹாட்ஜுடனின் ஒருபால் காதலுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Mine forever 😍💍❤️ pic.twitter.com/cal3fyfsEs
— Danielle Wyatt (@Danni_Wyatt) March 2, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Kiara Nithya
Contact at support@indiaglitz.com
Comments