ஆணும் பெண்ணும் சமமல்ல: விராத் கோஹ்லியின் மகளிர் தின வீடியோ

  • IndiaGlitz, [Thursday,March 08 2018]

இன்று உலகம் முழுவதும் மகளிர் தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்களை பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் சமீபத்தில் நடிகை அனுஷ்காவை திருமணம் செய்தவருமான விராத் கோஹ்லி தனது சமூக வலைத்தள பக்கத்தில் மகளிர் தின வாழ்த்து குறித்த ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ஆணும் பெண்ணும் நிச்சயம் சமம் அல்ல என்று தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவில் விராத் கோஹ்லி மேலும் கூறியதாவது: ஆண்களும், பெண்களும் நிச்சயம் சமம் அல்ல என்பதை உறுதியுடன் கூற விரும்புகிறேன். உண்மை என்னவெனில், ஒருவரை விட ஒருவர் தாழ்ந்தவர் என்பதுதான் உண்மை. பெண்கள், பாலியல் வன்கொடுமை, பாலின பாகுபாடு, பாலியல் தொல்லைகள், அலுவலக பிரச்சனைகள், அடக்குமுறை, வன்முறைகள் ஆகிய பல பிரச்சனைகளை சந்தித்து கொண்ட போதிலும் மன உறுதியுடன் வளர்ச்சி மற்றும் முன்னேற்ற பாதையை நோக்கி செல்கின்றனர். இப்போது நீங்கள் சொல்லுங்கள்? ஆணும், பெண்ணும் சமமா? நிச்சயம் இல்லை. அவர்களில் ஒருவரை விட ஒருவர் சிறந்தவர்.

இன்றைய மகளிர் தின நாளில் உலகில் உள்ள அனைத்து பெண்களுக்கும் என்னுடைய மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்' என்று விராத் கோஹ்லி அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

More News

தயாரிப்பாளர் சங்க வேலைநிறுத்தம்: தியேட்டர் அதிபர்கள் எடுத்த அதிரடி முடிவு

திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் புதிய படங்கள் ஒளிபரப்பு செய்யப்படுவதற்கு, க்யூப் மற்றும் யுஎஃப்ஓ உள்ளிட்ட டிஜிட்டல் ஒளிபரப்பு நிறுவனங்கள் திரைத்துறையினரிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த

நான் ஒரு கலைஞனாக மட்டும் சாகக் கூடாது: மாணவர்கள் முன் கமல் உரை

நடிகர் கமல்ஹாசன் கடந்த மாதம் மதுரையில் அரசியல் கட்சியை தொடங்கி அரசியல் களத்தில் குதித்துள்ள நிலையில் பொதுமக்களிடமும் மாணவர்களிடமும் அவ்வப்போது உரையாடல் நடத்தி வருகிறார்.

எச்.ராஜாவை கடவுள் ஆசிர்வாதிக்கட்டும்: விஷால்

தந்தை பெரியார் சிலை குறித்து பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா தனது ஃபேஸ்புக்கில் கூறிய கருத்துக்கு கடந்த இரண்டு நாட்களாக கடும் கண்டனங்கள் அரசியல் கட்சிகளிடம் இருந்து வந்த நிலையில்

உஷாவின் கணவருக்கு ஆறுதல் கூறிய கமல்

நேற்றிரவு திருச்சியில் மூன்று மாத கர்ப்பிணியான உஷா, தனது கணவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் என்பவர் எட்டி உதைத்ததால் கீழே விழுந்து பரிதாபமாக மரணம் அடைந்தார்

நான் ஏன் அரசியலுக்கு வரவில்லை: சத்யராஜ் கூறிய வித்தியாசமான காரணம்

'எனக்கு ஓட்டு அரசியல் என்பதில் விருப்பமில்லை. என்னால் யாருக்கும் அடிமையாக இருக்க முடியாது. மக்களுக்கு கூட என்னால் அடிமையாக இருக்க முடியாது