'ஓ சொல்றியா மாமா' பாடலுக்கு செம ஆட்டம் போட்ட விராத் கோஹ்லி: வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’ஓ சொல்றியா மாமா’ என்ற பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடி இருப்பார் என்பதும் இந்த பாடல் உலக அளவில் மிகப் பெரிய ஹிட்டானது என்பது தெரிந்ததே .
இந்த பாடலுக்கு பல திரையுலக பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் நடனமாடிய நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது நண்பர்களுடன் நடனமாடி இருக்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
பெங்களூர் அணியை சேர்ந்த மேக்ஸ்வெல் மற்றும் சென்னை பெண் வினிராமன் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில் பெங்களூர் அணி வீரர்களுக்கு மேக்ஸ்வெல் விருந்து வைத்தார். இந்த விருந்தில் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் கலந்துகொண்டார். மேலும் பெங்களூர் அணியை சேர்ந்த அனைவரும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவின்போது ’புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற 'ஓ சொல்றியா மாமா’ என்ற பாடல் போடப்பட்டபோது விராட் கோலி தனது நண்பர்களுடன் சேர்ந்து நடனம் ஆடினார். இந்த நடன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Mood ?? @imVkohli @RCBTweets #IPL #IPL2022 #ViratKohli #CricketTwitter #RCB #PlayBold pic.twitter.com/pWwYYSFFq0
— RCBIANS OFFICIAL (@RcbianOfficial) April 27, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments