மீண்டும் தான் யாரென நிரூபித்த கோலி… கேப்டவுனில் நடந்த பரபரப்பு சம்பவங்கள்!
- IndiaGlitz, [Thursday,January 13 2022] Sports News
தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. ஏற்கனவே இந்தத் தொடரில் 1-1 என இருஅணிகளும் சமனிலையில் இருப்பதால் வெற்றிவாய்ப்பு யாருக்கு என்ற விறுவிறுப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை ஒரு முறையாவது வென்றுவிட வேண்டும் என்று இந்திய வீரர்களும் ஆக்ரோஷம் காட்டிவருகின்றனர்.
இந்தத் தருணத்தில் நீண்டகாலமாக ஃபார்ம் அவுட் ஆகியிருப்பதாகக் கூறப்பட்ட நமது டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி இந்தப் போட்டியில் திறமையாக விளையாடி வருகிறார். 3 ஆவது டெஸ்டில் முதலில் டாஸ் வென்ற கேப்டன் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனால் முதல் இன்னிங்ஸில் இந்தியா 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது. இந்தப் போட்டியில் கோலி நீண்ட நாட்களுக்குப் பிறகு 79 ரன்களை அடித்து தனது பழைய நிலைமைக்குத் திரும்பியிருக்கிறார்.
தொடர்ந்து விளையாடிய தென்ஆப்பிரிக்கா 210 ரன்களுக்கு அவுட்டாக அதில் Kegan Peterson மட்டும் 72 ரன்களை எடுத்திருந்தார். இதில் விராட் கோலி, டெம்பா பவுமா விக்கெட்டை கணக்கச்சிதமாகக் கணித்து விளையாடியது ரசிகர்கள் மத்தியில் பிரம்மிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசிய அனைத்துப் பவுலர்களும் ஒரு கட்டத்தில் விக்கெட்டை எடுக்க முடியாமல் தவித்தபோது கோலி முகமது ஷமியை பந்து வீச அழைத்தார். அதாவது பவுலர்கள் பந்து வீசினால் அது பேட்டில் பட்டு எட்ஜ் ஆகி பீல்டிங் செய்யும் வீரர்களுக்கு முன்பே விழுந்துவிடுவதைக் கவனித்த கோலி முகமது ஷமி வீசிய பந்தில் கணக்கச்சிதமாக டெம்பா பவுமா பந்ததை கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். இது பார்ப்பதற்கே மிகவும் சுவாரசியத்தை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் 100 கேட்ச்களை பிடித்த 4 ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் அடைந்ததும் குறிப்பிடத்தக்கது. இதகு முன்பு ராகுல் டிராவிட், சச்சின், அசாரூதின் போன்றோர் சர்வதேச போட்டிகளில் 100 விக்கெட்டுகளை பிடித்திருந்தனர். தற்போது டெம்பா பவுமா கேட்சை பிடித்து கோலியும் இந்த சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிவரும் இந்தியா நேற்றைய போட்டியில் 2 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்களை எடுத்ததும் குறிப்பிடத்தக்கது.மீண்டும் தான் யாரென நிரூபித்த கோலி… கேப்டவுனில் நடந்த பரபரப்பு சம்பவங்கள்!
தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. ஏற்கனவே இந்தத் தொடரில் 1-1 என இருஅணிகளும் சமனிலையில் இருப்பதால் வெற்றிவாய்ப்பு யாருக்கு என்ற விறுவிறுப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை ஒரு முறையாவது வென்றுவிட வேண்டும் என்று இந்திய வீரர்களும் ஆக்ரோஷம் காட்டிவருகின்றனர்.
இந்தத் தருணத்தில் நீண்டகாலமாக ஃபார்ம் அவுட் ஆகியிருப்பதாகக் கூறப்பட்ட நமது டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி இந்தப் போட்டியில் திறமையாக விளையாடி வருகிறார். 3 ஆவது டெஸ்டில் முதலில் டாஸ் வென்ற கேப்டன் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனால் முதல் இன்னிங்ஸில் இந்தியா 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது. இந்தப் போட்டியில் கோலி நீண்ட நாட்களுக்குப் பிறகு 79 ரன்களை அடித்து தனது பழைய நிலைமைக்குத் திரும்பியிருக்கிறார்.
தொடர்ந்து விளையாடிய தென்ஆப்பிரிக்கா 210 ரன்களுக்கு அவுட்டாக அதில் Kegan Peterson மட்டும் 72 ரன்களை எடுத்திருந்தார். இதில் விராட் கோலி, டெம்பா பவுமா விக்கெட்டை கணக்கச்சிதமாகக் கணித்து விளையாடியது ரசிகர்கள் மத்தியில் பிரம்மிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசிய அனைத்துப் பவுலர்களும் ஒரு கட்டத்தில் விக்கெட்டை எடுக்க முடியாமல் தவித்தபோது கோலி முகமது ஷமியை பந்து வீச அழைத்தார். அதாவது பவுலர்கள் பந்து வீசினால் அது பேட்டில் பட்டு எட்ஜ் ஆகி பீல்டிங் செய்யும் வீரர்களுக்கு முன்பே விழுந்துவிடுவதைக் கவனித்த கோலி முகமது ஷமி வீசிய பந்தில் கணக்கச்சிதமாக டெம்பா பவுமா பந்ததை கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். இது பார்ப்பதற்கே மிகவும் சுவாரசியத்தை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் 100 கேட்ச்களை பிடித்த 4 ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் அடைந்ததும் குறிப்பிடத்தக்கது. இதகு முன்பு ராகுல் டிராவிட், சச்சின், அசாரூதின் போன்றோர் சர்வதேச போட்டிகளில் 100 விக்கெட்டுகளை பிடித்திருந்தனர். தற்போது டெம்பா பவுமா கேட்சை பிடித்து கோலியும் இந்த சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிவரும் இந்தியா நேற்றைய போட்டியில் 2 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்களை எடுத்ததும் குறிப்பிடத்தக்கது.